உங்களது ஐபோனானது iOS 10 இயங்கு செயலி மூலம் மூலம் செயல்படுவதாக இருந்தால் உங்கள் அலைபேசியில் உள்ள புகைப்படங்களனைத்தும் உங்கள் ஐபோனில் 'புகைப்படங்கள் செயலி' மூலம் உங்களுக்குத் தெரியாமலேயே வேவு பார்க்கப்படும் அபாயம் உள்ளது.
இது தொடர்பாக 'பார்ச்சூன்' இதழில் வெளிவந்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கூகிள் மற்றும் ஆப்பிள் ஆகிய இரண்டுமே அலைபேசிகளில் சேமிக்கப்படும் புகைப்படங்களில் என்ன உள்ளது என்பதை அறிய 'கம்ப்யூட்டர் விஷன்' என்ற வசதியை பயன்படுத்துகிறது. ஆனால ஆப்பிளை பொருத்தவரை இது மிகவும் சுலபமான ஒன்றாக உள்ளது.
ஆப்பிள் ஐபோனின் 'போட்டோ லைப்ரரி' பகுதியில் உள்ள 'சர்ச்;'வசதியை பயன்படுத்தி நம்மால் குறிப்பிட்ட ஒரு நபரை அல்லது பொருளை எளிதாக தேட முடியும். உதாரணமாக நீங்கள் உங்கள் போனை பயன்படுத்தி புதிதாக ஒரு புகைப்படம் எடுக்கும் பொழுது, போனில் உள்ள 'இமேஜ் சிக்னல் ப்ராசசர்' மூலமாக குறிப்பிட்ட படத்தில் உள்ள நபர்கள் மற்றும் பொருட்களை பிரித்தறிந்து அடையாளம் காண முடியும். மேலும் அவற்றை ஏற்கனவே உள்ள தனது இமேஜ் டேட்டாபேசுடன் ஒப்பிட்டு ஒன்றிணைக்க முடியும்.
இதை உங்கள் போனின் 'போட்டோ லைப்ரரி' பகுதியில் உள்ள 'சர்ச்' உருப்பெருக்கியை தொடர்ந்து அழுத்திக் கொண்டிருப்பதன் மூலம் சோதிக்கலாம். இந்த வசதியை பயன்படுத்தி யாருடைய புகைப்படங்கள் மட்டும் உங்கள் போனில் இடம்பெறலாம் என்பதையும் முடிவு செய்ய முடியும். போனின் பேட்டரியை மிச்சப்படுத்தும் வகையில் இந்த சேவையானது உங்கள் போன் சார்ஜ் ஆகும் போது மட்டுமே செயல்படுமாறு வடிவமைக்கபப்ட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக