கம்போடியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மோசமான பாக்டீரியாவின் தாக்குதலால் முகத்தின் பாதிபக்கத்தை இழந்து தவிக்கும் துயரச் சம்பவம் நடந்துள்ளது.
கம்போடியாவைச் சேர்ந்தவர் சுத் ரெட் (18). இவர் உடைந்த பல்லை நீக்குவதற்காக பல் மருத்துவரிடம் சென்றுள்ளார். அதற்கான சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சுத் ரெட்க்கு முகத்தில் ஒரு அறிகுறி தோன்றியுள்ளது. அதன் பின்பு அவரது தொண்டையில் பாக்டீரியா தன்னுடைய தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அது இரத்ததில் கலந்து முகம் முழுவதிலும் பரவத்தொடங்கியுள்ளது. இதனால் சுத்ரெட்யின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்துள்ளது. அதாவது அந்த பாக்டீரியா முகத்தில் இருந்த சதைகளை கொஞ்சம் கொஞ்சமாக தின்னத்துவங்கியுள்ளது.
இந்த பாக்டீரியா ஒரு சிறுவெட்டுக்காயம் இருந்தால் கூட உடனடியாக பரவுக்குடிய கொடிய நோய் என்று கூறப்படுகிறது.
இந்த நோயின் தாக்கத்தால் அவரால் சரிவர சாப்பிட முடியவில்லை என்றும் தற்போது முற்றிலும் எடை குறைந்து மிகவும் பரிதாப நிலையில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சுத்ரெட்ற்கு சிகிச்சை அளிப்பதற்கு 40 வருடம் அனுபவம் உள்ள ஜெர்மன் மருத்துவர்கள் உள்ளார்கள் என்றும் ஆனால் சிகிச்சை அளிப்பதற்கு போதிய அளவு பணம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் யாரேனும் உதவியை நம்பியுள்ளனர்.
இந்த அரிய வகை நோய் வந்தால் ஐந்தில் இரண்டு பேர் உயிரிழந்துவிடுவர் என்றும் கூறப்படுகிறது. இதனால் சுத்ரெட்டி தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.
சுத்ரெட்ற்கு வந்த இதை பாக்டீரியா தாக்குதலை சைனஸ் இன்பெக்சன் என்று கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக