ஒரு வீட்டின் சுபிட்சத்தை இரண்டு இடங்கள் சுத்தமாக இருப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அவை முறையே சமையல் அறை மற்றும் கழிப்பறையாகும். சமையலறையை தினமும் காலை மற்றும் இரவில் சுத்தப்படுத்திவிட வேண்டும்.
காரணம் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் நோய்கள் பல வந்துசேரும். சமையல் பாத்திரங்களை சரியாக சுத்தப்படுத்தாவிட்டால் சால்மோனெல்லா மற்றும் ஹெபடைடிஸ் ஏ போன்ற நோய்கள், உண்ணும் உணவுகள் மூலம் வரும். சுத்தம் சோறு போடும் என்று சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள்?
காரணம் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் நோய்கள் பல வந்துசேரும். சமையல் பாத்திரங்களை சரியாக சுத்தப்படுத்தாவிட்டால் சால்மோனெல்லா மற்றும் ஹெபடைடிஸ் ஏ போன்ற நோய்கள், உண்ணும் உணவுகள் மூலம் வரும். சுத்தம் சோறு போடும் என்று சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள்?
சமையல் பாத்திரங்களை நன்றாக விளக்கி சுத்தப்படுத்தவும், கீழே சிந்திய உணவுப் பொருட்களைத் துடைக்கவும் முன்பு துணி அல்லது தேங்காய் நார்களையே பயன்படுத்தினோம். ஆனால் சமீப காலமாக நம்மில் பலர் ஸ்பாஞ்சுகளைப் பயன்படுத்துகிறோம். ஸ்பாஞ்ச் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
ஒரு சதுரமான ஸ்பாஞ்ச் எடுத்துக் கொண்டால் அதை மூன்று நாட்கள் மட்டும் பயன்படுத்துங்கள். அது இற்றுப்போகும் வரை பயன்படுத்திக் கொண்டிருந்தால் அதில் இலவச இணைப்பாக லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் படிந்துவிடும். அந்தச் சிறிய ஸ்பாஞ்ச் 10 மில்லியன் பாக்டீரியாக்களின் உறைவிடமாக உள்ளது.
சமையலறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச்சுகளை எப்படி சுத்தப்படுத்துவது?
ஸ்பாஞ்சுகளை பயன்படுத்தாத சமயங்களில் அதை உலர்வாக வைத்திருக்கவும். ஈரத்தன்மை பலவிதமான கிருமிகளை வரவேற்கும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஸ்பாஞ்சுகளை சுத்தம் செய்ய வேண்டும். அதுவும் ப்ளீச்சிங் பவுடரில் ஊற வைத்து பயன்படுத்தினால், கிருமிகள் அழிந்து விடும்.
ஸ்பாஞ்சுகளை கொதிநீரில் ஊற வைக்கவும். இதன் மூலம் கிருமிகளை அழிந்துவிடும். அல்லது இரண்டு நிமிடம் ஸ்பாஞ்சை மைக்ரோவேவ்வில் அதிக சூட்டில் வைக்க, 90 சதவிகிதம் நுண்கிருமிகள் அழிந்துவிடும்.
பாத்திரம் விளக்க பயன்படும் தூள் அல்லது சோப்பு வகைகளிலோ ஸ்பாஞ்சுகளை ஊறவைக்க, அவற்றிலுள்ள கிருமிகள் அழியும்.
குளிர்ந்த நீரில் கழுவ அவற்றில் உள்ள அழுக்குகள் தளர்ந்து விடும். பின்னர் ஸ்பாஞ்சில் உள்ள மீதி தண்ணீரை பிழிந்து வெளியேற்றவும்.
எத்தனை தடவைகள் ஸ்பாஞ்சுகளை பயன்படுத்துகிறோமோ அத்தனை தடவைகள் அதனை சுத்தப்படுத்த வேண்டும். மிகவும் நைந்து போய் அழுக்காக இருப்பதை பயன்படுத்தவேண்டாம். தூக்கி எறிந்துவிடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக