ஜெர்மனை சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்று, அங்கு காதலியால் ஏமாற்றப்பட்டு, நாடு திரும்ப முடியாமல், குப்பை, அள்ளியும், பிச்சை எடுத்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்.
Not a tourist but a garbage scavenger!
This German citizen has to work hard to stay alive in the Philippines
சுற்றுலா பயணிகள் பயணிக்க விரும்பும் நாடுகளில் முதன்மை பட்டியலில் இருக்கும் நாடு பிலிப்பைன்ஸ். சந்தோசமாக நாட்களை கழிக்க இது ஒரு அற்புத இடமாக திகழ்கிறது. இங்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பலர், அங்கேயே பிலிப்பைன் மக்களுடன் உறவுகளில் சிக்கிக் கொள்வதும் உண்டு. பிலிப்பைன் பெண்களுடன் காதல் வயப்பட்டு அதிக நாட்கள் அங்கேயே தங்கிவிடும் ஆண்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
Kristoff, 49, has been stuck in the country for the past 8 years with no means of going back to Germany
ஆனால், சில சுற்றுலா பயணிகள் தவறான பெண்களுடன் பழகி தங்கள் வாழ்க்கையையே இழப்பதும் பிலிப்பைன்ஸ்-ல் சாதாரணமாக நடக்கும் செயலாக காணப்படுகிறது...
இப்படி தான் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி ஒருவர் ஒரு பிலிப்பைன் பெண்ணால் ஏமாற்றப்பட்டு 8 வருடங்களாக குப்பை அள்ளியும், பிச்சை எடுத்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா எனும் பகுதியில் இது போல பல சுற்றுலா பயணிகள் ஏமாற்றப்பட்டு, தெருவில் சுற்றுவதை சர்வ சாதாரணமாக காணப்படுகிறது.
பிலிப்பைன் பெண்கள் காதலித்து ஏமாற்றும் போது, பணம், உடமைகளுடன் சேர்த்து, அவர்களுடைய விசா மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றையும் திருடி விற்று விடுகின்றனர். இதனால், தங்கள் நாடு திரும்ப முடியாமல், குடும்பத்தை காண முடியாமல் பலர் தவிக்கின்றனர்.
கிறிஸ்டோப்!
கிறிஸ்டோப் எனும் 49 வயதான ஜெர்மன் நபரின் காதல் ஃபேஸ்புக்கில் வெளியான பிறகு தான், பிலிப்பைன்ஸ் நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்துக் கொண்டிருப்பதே வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
இவரை காதலித்த ஒரு பிலிப்பைன் பெண், இவரை ஏமாற்றி நடுத்தெருவில் விட்டு சென்றுவிட்டார். முதலில் அந்த பெண்ணை கண்டதும் இதயத்தை பறிகொடுத்த கிறிஸ்டோப் அந்த பெண்ணை இளவரசி போல நடத்தியுள்ளார்.
பணம் ஸ்வாஹா....
கிறிஸ்டோப் தன்னை மிகுதியாக விரும்புவதை அறிந்த அந்த பெண். சரியான நேரம் பார்த்து, கிறிஸ்டோப்பின் பணம், உடமைகள், விசா, பாஸ்போர்ட் என அனைத்தையும் திருடிக் கொண்டு தப்பிவிட்டார். தெருக்களில் திரியும்
தெருக்களில் திரியும் கிறிஸ்டோப்!
பழக்கம் இல்லாத நாட்டில், நண்பர்கள், உறவினர் என உதவ யாருமின்றி பணத்திற்காக தெருக்களில் குப்பை பொறுக்கிக் கொண்டும், பிச்சை எடுத்தும் பிழைப்பு நடத்தி வருகிறார் கிறிஸ்டோப்.
முகநூல் பதிவு!
பிலிப்பைன்ஸ் சென்ற ஒரு சுற்றுலா பயணி, கிறிஸ்டோப்பை சந்தித்து, அவர் ஏமாற்றப்பட்டதை அறிந்து. அவரை பற்றிய தகவல்களுடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனால், அவரை அறிந்து, அவரது உறவினர் அல்லது நண்பர்கள் அவரை காப்பாற்ற முடியும் என நம்பி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக