A still from the video where Om Swami teaches a topless model yoga. Pic/YouTube
சர்ச்சைகளுக்குப் பெயர் போன பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்ட சாமியார் ஓம் ஸ்வாமி பெண் மாடல் ஒருவருக்கு டாப்லெஸ் யோகா சொல்லிக் கொடுக்கும் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
Bigg Boss 10': Om Swami threatened to break Salman Khan's bones in finale
இந்தியாவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு பிரபலங்கள் பங்குபெற்று வந்த இந்த நிகழ்ச்சியில் டெல்லியை சேர்ந்த ஓம் ஸ்வாமியும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து ஓம் ஸ்வாமியின் அட்டகாசத்திற்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கதவை உடைத்தது, லோபா என்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது மற்றும் பொருட்களை திருடுவது என எல்லை மீறி நடந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் ரகளை செய்த ஸ்வாமி ஓம் ஒரு கட்டத்தில் தனது சிறுநீரை சக போட்டியாளர்கள் மீது தெளித்ததால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவமானம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 80ஆவது நாள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்தை அவமானமாக கருதிய ஸ்வாமி உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு தன்னை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவமானப்படுத்தி வெளியேற்றியது தான் காரணம் என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
சல்மானை அறைந்தாரா?
தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கானை தான் கன்னத்தில் அறைந்ததாக கடந்த ஜனவரி மாதம் மீடியாக்களிடம் தெரிவித்து மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால், ஓம் ஸ்வாமி , சல்மான் கானை அறைந்ததாக கூறுவதும் விளம்பரத்திற்கே என்று கருதப்பட்டது.
கிளு கிளு நடனம்
விளம்பரப் பிரியரான ஓம் ஸ்வாமியை டிஆர்பி ரேட்டிங்கிற்காக வடஇந்திய மீடியாக்கள் அழைப்பதை வழக்கமாக வைத்துள்ளன. இதனால் எப்போதும் ஏதாவது ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படத்துவதே இவரின் வேலை. கடந்த வாரம் ஓம் ஸ்வாமி தியானம் செய்வது போலவும் பிக்கினி ஆடையில் மாடல் பெண் ஒருவர் அவரை சுற்றி சுற்றி ஆடுவதைப் போல ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். ஆனால் கிருஷ்ணர் கோபியர்கள் சூழ இருக்கும் போது தான் மட்டும் பெண்களுடன் இருக்கக் கூடாதா என்று தனது சர்ச்சை வீடியோவிற்கு விளக்க்ம தருகிறார் இவர்.
டாப்லெஸ் யோகா
விளம்பரத்திற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை வழக்கமாக வைத்திருக்கும் இந்த சர்ச்சை சாமியார் எல்லை மீறிய செயலாக மாடல் அழகி ஒருவரை டாப்லெஸ்ஸாக அமர வைத்து அவருக்கு யோகா சொல்லிக் கொடுப்பது போன்ற ஒரு வீடியோவை இணையத்தில் உலவ விட்டுள்ளார். இநத் வீடியோ தற்போது இணையத்தில் மிக வைரலாக பரவி அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக