ஞாயிறு, 24 ஜூன், 2018

கம்ப்யூட்டரில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி?

தகவல் பரிமாற்றத்தில் எஸ்எம்எஸ் எனப்படும் டெக்ஸ்ட் மெசேஜ்களை சில சமயங்களில் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கொண்டு வசதியாக அனுப்ப வேண்டும் என நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆன்ட்ராய்டில் இந்த ஆசையை தீர்த்துக் கொள்ள முடியும். இதற்கு ஆன்ட்ராய்டு மெசேஜஸ் ஆப் இருந்தால் மட்டும் போதுமானது.



ஆன்ட்ராய்டு மெசேஜஸ் என்பது ஆன்ட்ராய்டு சாதனங்களுக்கான கூகுளின் எஸ்எம்எஸ்/ஆர்சிஎஸ் சாட் சேவையாகும். உலகில் பயன்படுத்தப்படும் பல கோடி சாதனங்களில் இது ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. புதிய அப்டேட் மூலம் பயனர்கள் இனி தங்களது குறுந்தகவல்களை கூகுள் க்ரோம், மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ், ஓபேரா, ஆப்பிள் சஃபாரி, மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் பல்வேறு பிரவுசர்களில் கிடைக்கும் வெப் சேவையில் இயக்க முடியும்.

வலைத்தளங்களுக்கான ஆன்ட்ராய்டு மெசேஜஸ் ஆன்ட்ராய்டு மெசேஜஸ் ஃபார் வெப் (Android Messages for Web UI) அழகான கூகுள் தீம், பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் IO 2018 நிகழ்வில் அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்ததை போன்ற வடிவமைப்பு புதிய சேவை கொண்டிருக்கிறது. உங்களது அனைத்து உரையாடல்களும் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் சேவைகளிலும் காணப்படும் என்பதால், உரையாடல்களை தவரவிட வேண்டிய அவசியம் ஏற்படாது.

ஆன்ட்ரா்யடு ஆப் போன்றே டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் சேவைகளிலும் எமோஜிக்கள், புகைப்படங்களை அனுப்ப முடியும். ஆன்ட்ராய்டு செயலி போன்றே வெப் சேவையும் இயங்கும் என்பதால் இது ஆச்சர்யமளிக்கவில்லை.

ஆன்ட்ராய்டு மெசேஜஸ் ஃபார் வெப் அம்சங்கள்:

- கூகுள் க்ரோம், மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ், ஓபேரா, ஆப்பிள் சஃபாரி, மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் பல்வேறு பிரவுசர்களில் ஆன்ட்ராய்டு மெசேஜஸ் வெப் சேவையை இயக்க முடியும்.

- வைபை அல்லது மொபைல் டேட்டா மூலம் பயன்படுத்த முடியும். - உங்களது அனைத்து கான்டாக்ட்களுக்கும் டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்ப முடியும்.

- புதிய மெசேஜ்களுக்கான அலெர்ட்களை பெற முடியும்.

- மெசேஜ் தரவுகளுக்கான நோட்டிஃபிகேஷன்களை கம்ப்யூட்டரில் பார்க்க முடியும்.

- டார்க் தீம் மற்றும் ஹை கான்ட்ராஸ்ட் உள்ளிட்ட மோட்கள் வழங்கப்பட்டுள்ளது.

- உங்களது மொபைல் போனினை கம்ப்யூட்டருடன் இணைத்திருப்பின், அடிக்கடி கியூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

- ஸ்மார்ட்போன் மொபைல் டேட்டா பயன்படுத்தும் பட்சத்தில் வெப் சேவை குறித்து உங்களது டேட்டா அளவு குறித்த எச்சரிக்கை செய்யப்படும்.

- கீபோர்டு ஷார்ட்கட்களும் பயன்படுத்த முடியும்.

உங்களின் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள ஆன்ட்ராய்டு மெசேஜஸ் செயலியை அப்டேட் செய்திருகிக வேண்டும். பிளே ஸ்டோரில் 3.3.143 வெர்ஷன் மூலம் இந்த அம்சம் வழங்கப்படுகிறது.

- செயலியை திறந்து மேல்பக்கம் வலது புறத்தில் இருக்கும் மெனு பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், புதிய அம்சம் குறித்த தகவலை பார்க்க முடியும். இதை (try it) க்ளிக் செய்தாலே இது வேலை செய்யும்.

- செயலியை திறந்து மேல்பக்கம் வலது புறத்தில் இருக்கும் மெனு பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், புதிய அம்சம் குறித்த தகவலை பார்க்க முடியும். இதை (try it) க்ளிக் செய்தாலே இது வேலை செய்யும்.

- இனி மெசேoஸ் ஃபார் வெப் (Messages for web) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- அடுத்து ஸ்கேன் கியூஆர் கோடு (Scan QR code) பட்டனை க்ளிக் செய்யவும்.

- பிரவுசரை ஓபன் செய்து கூகுள் க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ், சஃபாரி, எட்ஜ் உள்ளி்ட்டவற்றில் ஒன்றை திறக்க வேண்டும்.

- வெப் பக்கத்தில் ரிமெம்பர் திஸ் கம்ப்யூட்டர் (remember this computer) ஆப்ஷனை க்ளிக் செய்யவும். (அடிக்கடி பயன்படுத்தும் பட்சத்தில் இவ்வாறு செய்யலாம்), இல்லையெனில் பாதுகாப்பு காரணங்களுக்காக இதை டிசேபிள் செய்யலாம்.

- மொபைலில் உள்ள கியூஆர் கோட் ஸ்கேனர் மூலம் கம்ப்யூட்டரில் உள்ள கியூஆர் கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும்.

ஸ்கேன் செய்யப்பட்டதும், உங்களது மொபைல் போன் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் உடன் இணைந்து கொள்ளும். இனி கனெக்ட்டெட் டு மெசேஜஸ் ஃபார் வெப் (Connected to Messages for web) என்ற வாசகத்தை திரையில் பார்க்க முடியும். இனி செயலியின் செட்டிங்ஸ் சென்றால் சைன்-இன் செய்யப்பட்டு இருக்கும் கம்ப்யூட்டர்களை பார்க்க முடியும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல