இந்தியன் 2 படப்பிடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கமல், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றார்.
இந்த நிலையில் இன்று இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இழப்பீட்டை படக்குழுவினர் இன்று வழங்கினர்.
இந்த நிலையில் இன்று இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இழப்பீட்டை படக்குழுவினர் இன்று வழங்கினர்.
உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடும், படுகாயமடைந்த ராமராஜனுக்கு 90 லட்சம், சிறு காயமடைந்தவருக்கு 10 லட்சம் என மொத்தம் 4 கோடி ரூபாயை லைகா நிறுவனம் ரூ.2 கோடி, கமல் மற்றும் இயக்குனர் சங்கர் தலா ரூ.1 கோடியும் வழங்கினர்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கல், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்வோம் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கல், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்வோம் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்தார்.
chennaionline
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக