அதாவது அவரின் எடை தற்போது 54கிலோ இருக்கிறது என்றால், அவருடைய வயிறு மட்டும் 20 கிலோவாக இருக்குமாம். இது அவருடைய மொத்த எடைதனில் 36 சதவிகிதம் ஆகும். ஆரம்பத்தில் இது சின்ன பிரச்சனை தான் என கருதிய அவருக்கு நாட்கள் செல்ல செல்ல வயிறு பெரியதாகி வலி ஏற்ப்பட தொடங்கியுள்ளது.
இதனால் அச்சமடைந்த ஹுவாங் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அவர்களும் வலியை குறைப்பதற்கான மருந்துகளை கொடுத்துள்ளனர். இதன் விளைவாக வயிற்றுவலி குறைந்திருந்தாலும் வயிறு விக்கமடைவது குறையவில்லை. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹுவாங்கிற்க்கு கல்லீரல் நோய் மற்றும் கருப்பையில் புற்றுநோய், உடலில் கட்டி உருவாகுதல், மார்பில் தேவையில்லாத நீர் கட்டி போன்றவை உருவாகியதை கண்டுகொண்ட மருத்துவர்களால் அவரின் வயிறு எதனால் பெரிதாகிக்கொண்டே செல்கிறது என்பதை மட்டும் கணிக்க இயலவில்லை
இதைப்பற்றி பேசிய அவர் இந்த வயிறு வீக்கம் என் வாழ்வில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் என்னால் நிம்மதியாக உறங்க கூட இயலவில்லை. இதனால் என் குழந்தைகளை கூட கவனிக்க இயலவில்லை. ஆகையால், என் மகன்களை அவர்களின் தாத்தாவும், பாட்டியும்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் விரைவாக இந்த பிரச்சனையில் இருந்து மீண்டுவிடுவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்தார். அந்த பெண்ணின் பிரச்சனையை அறிந்த பலர் அவரின் மருத்துவத்திற்கு உதவ முன் வந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக