சனி, 22 ஆகஸ்ட், 2020

நித்தியானந்தாவின்.. அம்பலமாகும் ரகசியங்கள்!

"கசமுசா" நித்தியானந்தாவின்.. அதிரடி "கைலாசா".. ஆனால் மேட்டரே வேறயா இருக்கே.. அம்பலமாகும் ரகசியங்கள்!கைலாசா நாட்டில் ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டு விட்டது.. பணம் தயாராகி விட்டது.. எல்லாவற்றையும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட போகிறேன்.. நித்தியானந்தாவின் இந்த அறிவிப்புதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்.. உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்" என்று சொல்வார்கள் இல்லையா.. அது போலத்தான் நித்தியானந்தாவின் இந்த கற்பனை கைலாசாவுக்குள் ஏகப்பட்ட கசமுசாக்கள் பதுங்கிக் கிடக்கின்றனவாம்.

அதாவது கைலாசா என்பது ஒரு நாடே அல்ல.. மாறாக ஏகப்பட்ட கம்பெனிகளையும், என்ஜிஓ அமைப்புகளையும் உள்ளடக்கியதுதான் இந்த நித்தியானந்தாவின் கற்பனை நாட்டின் நிஜம் என்பதை இந்தியா டுடே அம்பலப்படுத்தியுள்ளது.

அதாவது பல்வேறு நிறுவனங்களையும், என்ஜிஓ அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு அதை ஒரு நாடு போல கற்பனையாக உருவாக்கி மக்களிடம் புதுத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது நித்தியானந்தா அன் கோ. இதுதான் இந்தியா டுடே அம்பலப்படுத்தியுள்ள பரபரப்பு தகவலாகும். இதுதொடர்பாக விரிவான கட்டுரை ஒன்றை இந்தியா டுடே தீட்டியுள்ளது. அதில் நித்தியானந்தாவின் "அஜென்டா"வையும் அது புட்டுப் புட்டு வைத்துள்ளது.

கைலாசா என்றால் என்ன.. முதலில் அதற்கு வருவோம்..

கைலாசா என்பது தனி நாடாக நித்தியானந்தா அன் கோ வடிவமைத்துள்ள ஒரு கான்செப்ட். ஆனால் உண்மையில் அப்படி ஒரு நிலப்பரப்பு எங்குமே கிடையாது. முற்றிலும் கற்பனையான நாடுதான் இந்த கைலாசா.. இந்த கைலாசவுக்குள் என்ன இருக்கிறது என்று உற்றுப் பார்த்தால் முற்றிலும் கற்பனைக்கும் எட்டாத திட்டங்களைத் தீட்டி வைத்துள்ளார் நித்தியானந்தா.

3 கண்டங்களில் பரவிக் கிடக்கும் பல்வேறு நிறுவனங்கள், என்ஜிஓ அமைப்புகளை உள்ளடக்கியதுதான் இந்த கைலாசா. அதாவது ஒரு ஆட்டுக் கூட்டம் போல பல நிறுவனங்களை உருவாக்கி, அதை ஒரு நாடாக உருவகப்படுத்தியிருக்கிறார் நித்தியானந்தா. இந்த நிறுவனங்கள்தான் கைலாசாவின் அடித்தளமாகும். இதைத்தான் உலகின் மாபெரும் டிஜிட்டல் இந்து தேசம் என்று நித்தியானந்தா கூறிக் கொண்டிருக்கிறார்.

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி தலைமறைவாகி ஓடிப் போனவர் நித்தியானந்தா. அவர் எங்கிருக்கிறார் என்று இதுவரை தெரியவில்லை. நாட்டை விட்டு போய் விட்டதாக கூறப்படுகிறது. ஈகுவடாரில் பதுங்கியிருப்பதாகவும், அங்கு ஒரு தீவை வாங்கி விட்டதாகவும் முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அதை ஈகுவடார் நாடு திட்டவட்டமாக மறுத்து விட்டது. அடைக்கலம் கேட்டார், விரட்டி விட்டு விட்டோம் என்று ஈகுவடார் தெளிவுபடுத்தி விட்டது.

இந்த நிலையில்தான் தனது நாட்டின் ரிசர்வ் வங்கியையும், கரன்சியையும், பொருளாதார திட்டத்தையும் விநாயகர் சதுர்த்தியன்று அறிமுகப்படுத்த போகிறேன் என்று கூறினார் நித்தியானந்தா. இதுதான் பலரையும் குழப்பி விட்டது. ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆசிய நாடுகளில் 13 நிறுவனங்களையும், என்ஜிஓ அமைப்புகளையும் உருவாக்கியுள்ளார் நித்தியானந்தா.

கடந்த ஒரு வருட காலகட்டத்திற்குள் இவை உருவாக்கப்பட்டுள்ளன. சமூக பொருளாதார அமைப்புகள் என்ற பெயரில் இவற்றை அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களுக்கேற்ப உருவாக்கியுள்ளார் நித்தியானந்தா. இந்த நிறுவனங்கள் மூலமாக நிதி வசூல் நடத்தியுள்ளனர். பெருமளவில் நிதியும் வந்துள்ளது. இதைத்தான் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், " மக்கள் உலகம் முழுவதிலுமிருந்து எனக்கு தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர். உள்ளூர் அரசுகளுடன் இணைந்து நாங்கள் இவற்றை ஒருங்கிணைத்துள்ளோம். இந்தப் பணத்தின் மூலமாக எங்களது ரிசர்வ் வங்கியை உருவாக்கியுள்ளோம்" என்று கூறியிருந்தார்.

இந்த அமைப்புகளை உருவாக்கிய சமயத்தில் அந்தந்த நாடுகளின் அரசுகளிடம் இவர்கள் அளித்த வாக்குறுதி என்னவென்றால், இந்து மதத்தை பின்பற்றுவோரின் அதிகாரப்பூர்வ அமைப்பாக எங்களது கைலாசா செயல்படும் என்பதுதான். இப்படி மத ரீதியாக அங்கீகாரம் பெற்று வைத்துள்ளது இந்த குரூப். அமெரிக்காவில் பல இடங்களில் இந்த குரூப்புக்கு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறைந்தது 10 அமைப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் என்ஜிஓ மற்றும் பொது நல அமைப்புகளைக பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹவாய் தீவில் கைலாசா ஆன் ஹவாய் தீவு என்ற பெயரில் ஒரு அமைப்பை பதிவு செய்துள்ளனர். அதேபோல இந்த அமைப்புடன் சான் ஜோஸ், மிச்சிகன், மின்னசோட்டா, பென்சில்வேனியா, பிட்ஸ்பர்க், டென்னஸி, டல்லாஸ், ஹூஸ்டன், சியாட்டில் ஆகிய மாநிலங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளையும் இணைத்துள்ளனர். சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோருக்கான சுயாட்சியான தேசம் என்று கூறி இவற்றைப் பதிவு செய்துள்ளனர். இந்த அமைப்புகள் அனைத்தயைும் யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா அதாவது நித்தியானந்தா தியானபீடத்தின் மறு பெயராம் இது - அந்த அமைப்புடன் ஒருங்கிணைத்துள்ளனர்.

அதேபோல கடந்த ஆண்டு ஹாங்காங்கில் ஸ்டான்லி தெருவில் உள்ள வேர்ல்ட டிரஸ்ட் டவரை முகவரியாக கொண்டு கைலாசா லிமிட்டெட் என்ற நிதி அமைப்பு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் 2 மத ரீதியிலான அமைப்புகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த நாடுகளில் இப்படி அமைப்புகளை உருவாக்கிய பின்னர்தான் இவை அனைத்தையும் கைலாசா நாடு என்று உருவகப்படுத்தி பேச ஆரம்பித்துள்ளார் நித்தியானந்தா.

சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இந்த கரன்சி மேட்டர் எப்படி என்று நமக்கு சந்தேகம் வரலாம்.. இங்கும் தனது புருடா வேலையை செய்துள்ளார் நித்தியானந்தா. அதாவது பல நாடுகளில் complementary currencies அதாவது கெளரவப் பணம் என்று ஒன்றை அனுமதித்துள்ளனர். அதாவது குறிப்பிட்ட பிரிவினர், அமைப்பினருக்கு இடையே மட்டும் புழங்கிக் கொள்ளக் கூடிய கரன்சி இது. அதேபோல private currency என்ற தனியார் பணத்திற்கும் அனுமதி உண்டு. இதுவும் மேலே சொன்ன மாதிரிதான். இதைத்தான் அப்படியே உல்டாவாக்கி கைலாசாவின் கரன்சி என அடித்து விட்டுள்ளார் அண்டப் புழுகர் நித்தியானந்தா.

அதன்படி கைலாசா குழுவினர் ஒரு கரன்சியை அச்சடித்துக் கொள்ளலாம். இதற்கான டிசைனை அமைத்துத் தர ஏகப்பட்ட நிறுவனங்கள் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ளனவாம். இந்தப் பணத்தை இந்த கைலாசாவில் உறுப்பினராக இருக்கும் நித்தியானந்தா பாஷையில் சொல்வதானால், கைலாசா குடிமக்கள், தாராளமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதை மேல்நாட்டு சட்டங்கள் அனுமதிக்கின்றன.

இந்தியாவில் இதற்கு அனுமதி கிடையாது. இங்கிலாந்தில் கூட பிரிஸ்டல் பவுன்டு, லூயிஸ் பவுண்டு என கெளரவ கரன்சி அமலில் உள்ளது. இதை சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட பிட் காயின் போலத்தான் இவையும்.

நித்தியானந்தாவைப் பொறுத்தவரை இதுதான் கைலாசா நாடு, என்று எந்த ஒரு பூமிப் பரப்பையும் காட்டவில்லை. காரணம் அப்படி ஒன்று நிஜத்தில் இல்லவே இல்லை. நிறுவனங்களை உருவாக்கி அதில் பணத்தை சேர்த்து வைத்துள்ளார் நித்தியானந்தா.. இதுதான் கைலாசா! இதை வைத்துக் கொண்டு என்ன மாதிரியான கேம் ஆட போகிறார் என்பதை வரும் காலத்தில்தான் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்..  

Thatstamil
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல