பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த Blogல் பதிந்துள்ளேன் - Marikumar

ஞாயிறு, 12 மே, 2019

நிரந்தரம், தற்காலிகம்... டாட்டூவில் எது பெஸ்ட்? - சில மருத்துவ அறிவுரைகள்! #TattooAlert

ஃபேஷன்’ என்ற பெயரில் பல அழகுசாதனப் பொருள்களை இன்றைய இளைய தலைமுறை பயன்படுத்துவதை நாமறிவோம்; அதையும் தாண்டி, உடல் சார்ந்த வெவ்வேறு சிகிச்சைகளையும் மேற்கொள்வது இப்போது அதிகரித்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது, உடல் முழுக்க டாட்டூ போட்டுக்கொள்ளும் கலாசாரம்.


இதற்கு எந்த எல்லையும் இல்லை. உடலில் பல இடங்களில், பல வண்ணங்களில், டிசைன் டிசைனாக டாட்டூ குத்திக்கொள்கிறார்கள். டாட்டூ போட்டுக்கொள்பவர்கள் அதிகமுள்ள நாடு அமெரிக்காதான். என்றாலும், அண்மைக்காலமாக நம் ஊரிலும் இதன் மோகம் அதிகரித்திருக்கிறது.

அதே நேரத்தில் 'டாட்டூ போட்டுக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லதல்ல’, `புற்றுநோய்கூட ஏற்படலாம்' போன்ற தகவல்கள் கிலியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

'டாட்டூ போட்டுக்கொள்வது நல்லதுதானா... அதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா... அதைப் போட்டுக்கொள்வதற்கு முன்னர் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் என்னென்ன?' என்பதையெல்லாம் குறித்து சரும மருத்துவர் ஷரதாவிடம் கேட்டோம்.
ஷரதா

``டாட்டூவில் நிரந்தரம், தற்காலிகம் என இரண்டு வகைகள் உள்ளன. தற்காலிக வகை, போட்டுக்கொள்ளும்போது எந்த வலியையும் ஏற்படுத்தாது. குறிப்பிட்ட சில தினங்களில், வாரங்களில் அழிந்துவிடும். நிரந்தர வகை, வலி ஏற்படுத்துவது.

இதை அழிப்பது மிகவும் சிரமம். எனவே, இவற்றில், உங்களுக்கு எது வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டு டாட்டூ போட்டுக்கொள்ளுங்கள். நிரந்தர வகையைப் போட்டுக்கொண்டால், அதற்காகச் செலவழித்த பணத்தைவிட ஆறு மடங்கு அதிகமாக அழிப்பதற்கு செலவு செய்யவேண்டியிருக்கும்.

நிரந்தர டாட்டூவைத் தேர்ந்தெடுப்பவர்கள், எந்தச் சூழலிலும் அதை அழிப்பதற்கு முயற்சி செய்யாமல் இருப்பதே நல்லது. எனவே, ஆரம்பத்திலேயே தற்காலிக டாட்டூ போட்டுக்கொள்வது சிறந்தது.

வண்ணங்கள் அதிகமிருக்கும் டிசைன்களைத்தான் பலரும் விரும்புகிறார்கள். வண்ணங்களுக்கு ஏற்றபடி லேசர்களும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான காந்த அலை அளவும் (Wavelength) கணக்கிலெடுத்துக்கொள்ளப்படும்.

இவை சருமத்துக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, டாட்டூ விரும்பிகள் பல வண்ணங்களில் போட்டுக்கொள்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். வண்ணங்களில் உபயோகப்படுத்தப்படும் நிறமிகள், சரும ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். அதேபோல, சிலர் உடலின் பல பாகங்களில் போட்டுக்கொள்வார்கள். சருமம் மெலிதாக இருக்குமிடங்களில் டாட்டூப் போடுவதைத் தவிர்க்கலாம்.

டாட்டூ போட என்னென்ன பொருள்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பொறுத்துதான் அதை அழிக்கவும் முடியும். எனவே, போட்டுக்கொள்வதற்கு முன்னர் அதற்காகப் பயன்படுத்தப்படும் ஊசிகள், நிறமிகள், மை, லேசர் எல்லாவற்றையும் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். ஒருவேளை அழிக்கவேண்டிய சூழல் வந்தால், இந்தத் தகவல்கள் பயன்படும். வேறொருவருக்குப் பயன்படுத்திய ஊசி வேண்டாம். இது, பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் கண்முன்னே புது ஊசியைப் பயன்படுத்துகிறார்களா என்பதை கவனிக்கவும்.

டாட்டூ போடுவதற்கு முன்னர், அந்த உடல் பாகத்தில் ஆன்டி-செப்டிக் க்ரீம் (Antiseptic Cream) போட்டுக்கொள்ளவேண்டியது அவசியம். இது பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல், சருமத்தைக் காக்க உதவும். சருமம் வறட்சியாக இருக்கும்போது, டாட்டூ போட்டுக்கொள்ளக் கூடாது. டாட்டு போட்டுக்கொள்ளும் தினத்துக்கு முந்தைய நாள் முழுக்க தண்ணீர் குடித்து, உடலில் சரும வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல, டாட்டூ போடுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும் க்ரீம்களை (Moisturizing cream) தடவிவர வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள் டாட்டூ போட்டுக்கொள்ளக் கூடாது.

டாட்டூ போட்டதற்கு பின்னர், அந்த இடத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு, அந்த நிபுணரோ, மருத்துவரோ பரிந்துரைத்த ஆன்டிபயாடிக் க்ரீம் (Antibiotic cream) பயன்படுத்த வேண்டும். குறி போட்ட இடத்தை சூரிய ஒளியில் காண்பித்து வருவது நல்லது. சில நாள்களுக்கு, அந்த இடத்திலுள்ள சருமம் சுருங்கி, செல்கள் உயிரிழந்து காணப்படும். இதற்காக, அந்த இடத்தைச் சொறிவதோ, துண்டு வைத்துத் துடைப்பதோ, ஒத்தடம் கொடுப்பதோ கூடாது. அந்தப் பகுதியை தண்ணீரில் நனையாமல் வறட்சியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பதினைந்து நாள்களுக்கு, ரசாயனம் எதுவும் அதன் மேல் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். நம் பண்பாட்டுக்குப் பொருந்தாதது டாட்டூ. அதோடு, பல உடல் உபாதைகளுக்கும், நோய்த் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும் என்பதால் இதைத் தவிர்த்துவிடுவதே சிறந்தது’’ என்கிறார் ஷரதா.
--------------------------------------------

டாட்டூ போடுவதற்கு முன் இதையெல்லாம் கவனிங்க!


ஆபத்தான ரசாயனங்களைப் பயன்படுத்துவதால் டாட்டூ பல உடல்நலப் பாதிப்புகளை உருவாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
டாட்டூ போடுவதற்கு முன் இதையெல்லாம் கவனிங்க!

பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் ஆதிகாலம் தொட்டே வழக்கத்தில் இருந்துவருகிறது. இன்றைய மாடர்ன் உலகில் டாட்டூ (Tattoo) என்ற பெயரில் இது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் என அனைத்துப் பிரலங்களும் தங்களுக்கு விரும்பிய உருவங்களை, டிசைன்களை டாட்டூவாக வரைந்துகொள்கின்றனர்.

அந்தக் காலத்தில் பச்சை குத்துவதற்கு இயற்கையான பொருள்களை மட்டுமே பயன்படுத்தினார்கள். மஞ்சள் பொடியுடன் அகத்திக் கீரை சேர்த்து அரைத்து, ஒரு துணியில் கட்டி, எரித்துக் கரியாக்குவார்கள், அதோடு தண்ணீர் கலந்து பசையாக்கி, கூர்மையான ஊசியால் அந்தப் பசையைத் தொட்டுத் தோலில் குத்தி உருவங்களை வரைந்தனர். பச்சை குத்தப்பட்ட பின் சுடுநீரால் கழுவி அதனைச் சுத்தம் செய்தால் பச்சை குத்திய இடம் அழகாகத் தோற்றமளிக்கும். இது எக்காலத்திலும் அழியாது. இதனால் பாதிப்புகளும் அதிகமில்லை.

ஆனால் தற்போது, கரித்துண்டு (கார்பன்), சைனா மை போன்ற மைகளைப் பயன்படுத்தி கருமை அல்லது கருமை கலந்த செம்மை நிறத்தில் டாட்டூ தீட்டுகிறார்கள். பச்சை நிறத்துக்கு குரோமிக் ஆக்சைடு பயன்படுத்துகிறார்கள். மெர்குரி (பாதரசம்), காட்மியம், இரும்பு ஆக்சைடு, ஆன்டிமணி, பெரிலியம், குரோமியம், நிக்கல், கோபால்ட், ஆர்சனிக் ஆகிய ரசாயனங்களும் கலக்கப்படுகின்றன.

ஆபத்தான ரசாயனங்களைப் பயன்படுத்துவதால் டாட்டூ பல உடல்நலப் பாதிப்புகளை உருவாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
மருத்துவர் மஞ்சுளா

இதுதொடர்பாக சரும மருத்துவர் மஞ்சுளா நாகராஜன் விரிவாகப் பேசினார்.

"முன்பு, ஓர் அடையாளத்திற்காகப் பச்சைக் குத்திக் கொண்டனர். இன்று நாகரிகம் என்னும் பெயரில் சிவப்பு, கருப்பு, மஞ்சள் போன்ற பல வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் டாட்டூ போட்டுக்கொள்கின்றனர். இதில் பல நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. அவற்றில் சில சீக்கிரம் மறைந்துவிடும்; சில நிறமிகள் ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது.

இதைக் குத்தியதும் சிலருக்கு உடனடியாகவோ அல்லது வெகுநாள்கள் கடந்தோ ஒவ்வாமை ஏற்படலாம். பல நாள்கள் கழித்து ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்கள் அது டாட்டூவால்தான் ஏற்பட்டது என்பதை உணரமாட்டார்கள்.

டாட்டூவில் இருக்கும் சாயம் உடலில் ஊறி நோயெதிர்ப்பு அமைப்பையே மாற்றிவிடும். சிலருக்குச் சாயங்களில் 'ஸ்ட்ரெப்டோமைசெஸ்' (streptomyces) என்ற கிருமி உருவாகும். நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளவர்களை அது மேலும் அதிகமாகப் பாதிக்கும். அதனால் டாட்டூ வைரவதற்கு முன்பாக ஒவ்வொருவரும் தங்கள் உடலின் தன்மையை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப வண்ணங்களைத் தேர்வு செய்வது நல்லது. சரும மருத்துவர் மஞ்சுளா நாகராஜன்

டாட்டூ வரைவதற்குப் பயன்படுத்தப்படும் ஊசி சுகாதாரமாக இருக்கவேண்டும். ஒரே ஊசியை பலருக்குப் பயன்படுத்துவதால் ஹெச்.ஐ.வி, ஹெப்படைட்டிஸ் பி, சி போன்ற ரத்தத்தின் மூலம் பரவும் கொடிய நோய்கள் ஏற்படலாம். எனவே, டாட்டூ குத்தும்போது ஊசி விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். சிலருக்குத் தழும்புகள் உருவாக வாய்ப்புண்டு. அரிதாகச் சிலருக்கு நார்த்திசுக்கட்டி உருவாகி, அவை புற்றுநோயாக மாறவும் வாய்ப்புண்டு.

வரைவதற்கு முன் கவனிக்கவேண்டிய விஷயங்கள்

* டாட்டூ வரைந்துகொள்ள விரும்புவோர், வரைவதற்கான உரிமம் பெற்ற கடைகள் அல்லது நிறுவனங்களிடம் மட்டுமே போட்டுக்கொள்ளவேண்டும்.

* ஒருமுறை பயன்படுத்தப்படும் ஊசியை மட்டுமே உபயோகிக்க வேண்டும். உங்கள் கண்ணெதிரில் பிரிக்கப்பட்ட டியூப் மற்றும் ஊசியை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கவேண்டும்

* நிக்கல், குரோமைட் போன்ற உலோக ஒவ்வாமை உள்ளவர்கள் டாட்டூ போட்டுக்கொள்ளக் கூடாது.

* வரையும் நபர் கையுறை அணிந்துள்ளாரா என்பதைக் கவனிக்க வேண்டும்.



வரைந்த பின் கவனிக்க வேண்டியவை:

* டாட்டூ வரைவதால் ஏற்படும் புண் ஆறக் குறைந்தது 15 நாள்கள் ஆகும்.

* டாட்டூ வரைந்த 24 மணி நேரத்திற்கு அதைச் சுற்றி ஒரு பேன்டேஜ் அணிவது அவசியம்.

* பேன்டேஜ் அணிவதற்கு முன்பு டாட்டூவின் மீது ஆன்டிபயாடிக் மருந்தைத் தடவவேண்டும்.

* டாட்டூ வரைந்த பிறகு தொடர்ந்து வலி இருந்தால் உடனே தோல்நோய் நிபுணரை அணுக வேண்டும்.

* சில நாள்களுக்கு டாட்டூவின் மேல் அழுத்தம் கொடுக்காத வகையில் தளர்வான ஆடைகள் அணிவது நல்லது.

டாட்டூ வரைந்தவர்கள் பிற்காலத்தில் அது பிடிக்காமல் போனால் அழிக்க முற்படுவார்கள். அவர்களுக்கு டாட்டூ வரைந்த இடம் மரத்துப் போவதற்கான மருந்து தடவப்பட்டு, லேசர் மூலம் டாட்டூ அழிக்கப்படும். ஆனால் ஒரே அமர்வில் நீக்க முடியாது. நான்கு முதல் ஆறு அமர்வுகள் தேவைப்படும்"என்கிறார் டாக்டர் மஞ்சுளா.

-vikatan
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP