இன்டர்நெட் தளங்களைப் பார்வையிடுகையில் அல்லது மின் அஞ்சல்களைப் பார்வையிடுகையில் திடீரென முளைத்து எழும் பாப் அப் சமாச்சாரங்கள் நமக்கு எரிச்சல் தருபவை ஆகும். எனவே தான் இப்போது பல கம்ப்யூட்டர்களில் பாப் அப் பிளாக்கர்கள் என்னும் தடைகள் நிறுவப்படுகின்றன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் இது இணைந்தே உள்ளது.
ஆனால் சில வேளைகளில் இவற்றை நாம் பார்க்க வேண்டிய சூழ்நிலைகளும் வரும். எடுத்துக் காட்டாக நாம் ஒரு வெப்சைட்டைப் பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது தொடர்பான வெப்சைட் முகவரிக்கு நமக்கு லிங்க் கிடைக்க இருக்கும். இதனை பாப் அப் பிளாக்கர் தடுத்துவிடும். இவ்வாறு தடுக்கப்படும் லிங்க்குகளைக் கிளிக் செய்து பார்க்க விரும்பினால் என்ன செய்வது? இவ்வாறு தடுக்கப்படுகையில் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு மீண்டும் அந்த லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
இப்போது கம்ப்யூட்டரில் நீங்கள் அந்த தளத்தைப் பார்க்கலாம் என்று செய்தி வரும். தளமும் கிடைக்கும். ஆனால் பாப் அப் பிளாக்கர் தொடர்ந்து தன் பணியைச் செய்துகொண்டு இருக்கும்.
வியாழன், 28 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக