பிறகு பேரனைப் பார்த்து ""ஆமாம், ஏன் அந்தக் குதிரையை நகர்த்த வேண்டாமென்று சொன்னாய்?'' என்றார்.
""இல்லை அந்தக் குதிரை கொள்ளு தின்று கொண்டிருந்தது.
அதை "டிஸ்டார்ப்' செய்ய வேண்டாமென்று தான் நான் அப்படிச் சொன்னேன்'' என்றான்.
அந்தச் சிறுவன்.
இது ஒரு சிறு பிள்ளைத்தனமான சம்பவமாக இருந்த போதிலும், அந்தப் பெயவர் அவன் சொல்வதிலும் ஒரு நன்மை இருக்கக் கூடுமென்று நம்பி அவன் சொல்லியபடி செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த குதிரையை நகர்த்தி விளையாடி ஒரு வேளை தோற்றும் இருக்கலாம். அவன் சொல்லியதை கேட்டது நன்மையில் தான் முடிந்தது. எதிலும் ஒரு நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை நன்மையில் தான் முடியும். எங்கே அவநம்பிக்கை தோன்றுகிறதோ அங்கேதான் தோல்வியின் துவக்கம் உள்ளது.
ஆகர்ஷ்ண விதி என்று ஒன்று உள்ளது. அதன்படி நாம் எதை அதிகம் விரும்புகிறோமோ, ஆவலோடு எதிர் பார்க்கிறோமோ அது அப்படியே நடக்கும். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்.
கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்.
முதன் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றக் கொள்ளும்போது எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்கிற பயத்தில் ஓட்டுவதனால் நிச்சயம் கீழே விழத்தான் செய்வார்கள். பிறகு நன்றாக ஒட்டக் கற்றுக் கொண்டோம் இனி விழ மாட்டோம் என்கிற நம்பிக்கைதான் கீழே விழாமல் இருக்கச் செய்கிறது.
எனவே எதைச் செய்தாலும், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அந்த நம்பிக்கையோடு செயல்படும்போது நிச்சயம் அவை தமக்கு சாதகமாகத்தான் அமையும், நன்மையில் தான் முடியும்.
கிருஷ்ணா வேணுகோபால்




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக