உன்னைப் போலவே உன் அயல் வீட்டுக்காரனையும் நேசி என்று கூறுகிறது விவிலியன் நூல்.
உன் அயல் வீட்டுக்காரனிலும் அன்பு கொள். ஆனால், வேலியை மட்டும் விலக்கி விடாதே என்று கூறுகிறார் பெஞ்சமின் ப்ராங்லின்.
எவ்வளவு தான் பணக்காரனாக இருந்தாலும் அயல் வீட்டுக்காரன் ஒருவன் இல்லாமல் ஒருவர் வாழ முடியாது என்று கூறுகிறது டென்மார்க் பழமொழியொன்று.
"தொலைவில் உள்ள உடன் பிறப்பை விட அருகில் இருக்கும் அயல் வீட்டுக்காரன் மேல்' என்று கூறுகிறார் சலமான்.
இப்படி பல்வேறு விதமாக அயல் வீட்டுக்காரனுக்கு விளக்கம் கூறப்படுகிறது.
பல்வேறு பொன் மொழிகள் நம்முடைய வாழ்க்கை எத்தனை சாதாரணமாக இருந்த போதிலும் மற்றவர்களை நாம் எப்போதாவது மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறோமா?
நமக்கு எத்தனையோ பேர் உதவி செய்கிறார்களே? பாற்காரன், தபாற்காரன், துணி வெளுப்பவன், முடி வெட்டுபவன் இப்படி எத்தனை பேர். எமக்கு உதவி செய்கிறார்களே, இவர்களுடன் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம். மழை பெய்தாலும், வெயில் எரித்தாலும் வருடக் கணக்காக தம் வாசற் படி ஏறி இறங்குகிறானே தபாற்காரன், அவனிடம் நாம் எப்போதாவது ஏதாவதொரு அன்பான வார்த்தை பேசியிருக்கிறோமா?
இப்படி நமக்கு சேவகம் செய்யும் எவரிடமாவது அன்பு வைக்க வேண்டாம்.
அன்புடன் உரையாடியிருக்கிறோமா?
அவர்களிடம் எப்படி சுகமா இருக்கிறாயா? என்ற ஒரு வாக்கியத்தையாவது கேட்டிருக்கிறோமா? அப்படி கூறுவதால் நாம் அடையும் பயன் என்ன தெரியுமா?
அதனால் நாம் அடைவது அதிக மகிழ்ச்சி; அதிக திருப்தி, நம்முடைய வார்த்தைகள் அவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சியை ஊட்டி விட்டது என்று நமக்குள்ளே ஒரு பெருமிதம். தமக்கு ஏற்படும் இந்த மனோபாவத்தையே அரிஸ்டோட்டில் மேலான சுயநலம் என்று கூறினார்.
தம்மை சந்தோஷப்படுத்துவதற்காக நாம் பிறரை மகிழ்ச்சிப்படுத்துகிறோம்.
இதைத்தான் சோராஸ்டர் என்ற அறிஞர் மற்றவர்களுக்கு உதவி செய்வது கடமையல்ல. அது ஒரு இன்பம். அது எமக்கு இன்பத்தையும் ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்துகிறது என்று சொன்னார் .
இதைப் பற்றி பெஞ்சமின் பிராங்லின் இப்படிக் கூறுகிறார்.
நீ மற்றவனுக்கு நல்லவனாக இருக்கும் பொழுது நீ உனக்கே நல்லவனாய் ஆகி விடுகிறாய் என்றார் இவர் மட்டுமா?
அறிஞர் எமர்சல் என்ன சொல்கிறார் தெரியுமா? நீங்கள் பரிசுத்தமான மனதுடையவராகி விட்டால் உலகே உங்களைப் பின்பற்றும் என்றார்.
மற்றவர்களின் நலனைப் பற்றி நாம் அக்கறை செலுத்துவது என்பது நம்முடைய கவலையை மறப்பதற்கு ஒரு சரியான வழியாகும். ஏராளமான இளைஞர்களை நண்பர்களாகப் பெறுவதற்கும் மிகுந்த சந்தோஷத்தை அடைவதற்கும் இதுவே ஒரே வழியாகும். எனவே நாமும் அடுத்த வீட்டுக்காரர்கள் மீதும் அக்கறை செலுத்துவோமாக?
இலங்கேஸ்வரன்




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக