ஒரு அதிசய வித்தை
இதுவரையிலும் என்
உளவுத் துறை விழிகளுக்கு
தெரிந்திருக்கவில்லை...!
மௌனத்தைக் களவாடி
வதிவிடமாய்க் கொண்டுள்ள
உனதான பவித்திரமான
இதய இல்லத்தில்
ஒழிந்திருக்கும் உதட்டு ரகசியங்களை
துழாவிப் பார்க்க
ஒற்றர்கள் வேண்டுமா? எ
ன்னதான் இருக்கிறது
உனது மனசுக்குள்,
உளவாளிகளை வைத்தும்
உரச முடியாத உன்
அதியுயர் பாதுகாப்பு வலயத்தில்
ஆழ ஊடுருவி காதல் யுத்தம்
செய்திட எனது
"ராடார்' விழிகளுக்கு
முடியவில்லை....!
என் வாலிப வனாந்தரங்களில்
உன்னைக் கைது செய்து போய்
காதல் கப்பம் கேட்கணும்
போலிருக்கு....
என்ன செய்ய
நீ என்னவள் என்பதால்
ஷாத்தான் குடி கொள்ளும்
உன் கன்னக் குழிகளிலும்
முடி திரளும்
என் பிடரிகளிலும்
நமதான காதலை
கட்டி வைத்திருக்கிறேன்...!
எஸ்.ஜனூஸ்




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக