ஆரம்ப காலத்தில் இப்படி ஒரு பேச்சு அடிபட்டது எனினும், அது ஊர்ஜிதமாகமலே மறைந்து போனது. தற்போது மீண்டும் அது தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.
Last picture of Diana
இளவரசி டயானா தனது காதலர் டோனி அல்பயத்துடன் பாரீஸ் நகரில் சுரங்க பாதையில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். விபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.
கடந்த 1997ஆம் ஆண்டு இந்த விபத்து நடந்தது. டயானா இறந்து 13 ஆண்டுகள் ஆகியும் அவரது மரணம் குறித்த சர்ச்சை இன்னமும் ஓயவில்லை. அவ்வப்போது புதுப்புதுத் தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
தற்போது, இளவரசி டயானா கார் விபத்தில் இறக்கவில்லை அவர் கொலை செய்யப்பட்டார் என்ற புதிய தகவல் கிளம்பியுள்ளது. இதை இங்கிலாந்தின் முன்னணி வக்கீல் மைக்கேல் மேன்ஸ் பீல்ட் தெரிவித்துள்ளார்.
டயானா- டோனி அல்பயத் ஆகியோருக்கு இடையே இருந்த உறவை முறிப்பதற்காக இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. அல்மா சுரங்கப் பாதையில் நிகழ்ந்த கார் விபத்து முன் கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கொலை சதி என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் இருவரையும் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செய்ததாக தெரியவில்லை. ஆனால் மிகப்பெரிய விபத்தின் மூலம் அவர்கள் இருவரையும் பிரிக்க சதி செய்யப்பட்டது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றும் வக்கீல் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக