நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தன் காமலீலை நடத்தியதன் வீடியோ காட்சிகள் மீடியாவில் அம்பலமாகின.
அதைத்தொடர்ந்து முதலில் இது கிராபிக்ஸ் என்றார். இரு தினங்களுக்குப் பிறகு ரஞ்சிதாவுடன் படுக்கையில் இருந்தது உண்மைதான் , ஆனால் சுயநினைவில் இல்லை என்றார். அடுத்த நாளே ரஞ்சிதாவுடன் தாம செக்ஸ் ஆராய்ச்சி நடத்தியதாகவும், தான் ஒரு சமூக ஆராய்ச்சியாளன் என்றும் கூறினார்.
அதற்கும் அடுத்த நாள், ஆமாம் நான் ரஞ்சிதாவுடன் செக்ஸ் வைத்துக் கொண்டேன், அதற்கென்ன இப்போது… என்ன செய்யப் போகிறீர்கள்? என்று திருப்பிக் கேட்டார்.
முற்றும் துறந்த சந்நியாசி, இளம் ஞானி, பிரம்மச்சரியம் மூலம் சித்திகள் அடைந்தவர் என வெளியில் பொய்யான பிம்பத்தை உருவாக்கிவிட்டு, உள்ளுக்குள் சாதாரண மனிதனின் ஆசாபாசங்களுடன் வாழ்க்கையைத் தொடர்ந்த கபட சந்நியாசியான நித்யானந்தன், இதுவரை தலைமறைவாக இருந்தபடி அவ்வப்போது வீடியோ பேட்டி கொடுத்து வருகிறார்.
முன்ஜாமீன் கோரிய அவரது மனுவும் கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. அவர் மீது மோசடி, பாலியல் புகார்கள் இன்னும் பதிவாகியவண்ணம் உள்ளன. நித்யானந்தா விவகாரத்தை சிபிஐ எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் தற்போது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் நித்யானந்தன். இதில் தாம் தியானபீட பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இப்போது டெல்லியில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தன், தனக்குப் பின் ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை, புதிய அறங்காவலர்கள் கொண்ட குழு நிர்வகிக்கும் எனறு கூறியுள்ளார்.
ஆனால் தான் எங்கிருக்கிறார் என்றும், எப்போது செய்தியாளர்களையும், பொதுமக்களையும் நேரடியாக சந்தித்து தன்மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பது குறித்தும் எதுவும் அவர் கூறவில்லை.
“தியான பீடத்தின் செயல்பாடுகள் தடையின்றி நடக்கவும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கவும் நான் அதன் தலைமைப் பீடப் பொறுப்பு மற்றும் அனைத்து அறக்கட்டளைப் பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பட்டால் நேரில் வந்து சுதந்திரமாக அனைத்து விஷயங்கள் குறித்தும் விளக்குவாராம். ஆனால் இப்போது இருக்குமிடம் எது என்பதை மட்டும் சொல்லமாட்டாராம் நித்யானந்தன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக