திறந்து வானோக்கும்
சிப்பிக்குள் விழும் பனித்துளி
முத்தாகின்றது
பனித்துளி போல் ஒரு துளியால்
பச்சிளங் குழந்தை
உருவாகின்றது
இத்தனை வருடமாய்
என்னகத்தே
மொத்தமிட முடியாத
எத்தனையோ துளிகள்
முத்தாகாமல்
முதிர்ந்து போயின
என் காலடியிற்
தேனாறு பாய்கின்றது
என் கனி கத்திலோ
கண்ணீரருவி காலுகின்றது
தாலாட்டும் ஓசை கேட்டால்
என் வயிறு
தாய்மைக்காய்த்
துடிக்கிறது.
அழு குரலும் மழலை
மொழிகளும்
என் உணர்வுகளை உசுப்பி
உள்ளத்தை
எரிமலையாக்குகின்றன
நானொரு
பூவாத மரமாய்க்
காய்க்காத தருவாய்
என்றுங் குமயாய்
இத்தரையில் நிற்கின்றேன்.
அல் கையிஸ் ஏறாவூர்
செவ்வாய், 2 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக