சம்பவ தினம் இல்போட் எனும் இடத்திலுள்ள உதைபந்தாட்ட விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த சமயம் மேற்படி பறவை யொன்றால் கௌவிச் செல்லப்பட்ட விரல் மைதானத்தில் விழுந்தது.
ஆரம்பத்தில் அதனை ஒரு கோழியின் எலும்புப் பகுதி யென்றே பாதுகாப்பு படைவீரர் நினைத்துள்ளார். . ஆனால் அதில் மனித நகம் ஒன்று இருப்பதைக் கண்ட அவருக்கு அதிர்ச்சி.
இந்நிலையில் பொலிஸாருக்கு தகவல் பறந்தது. இதனையடுத்து அந்த விரல் பகுதி இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அது மஹ்த் அஹ்மட் (Mahmood Ahmad, 41) என்ற வீட்டு பணியாளருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டது.
திருமணமாகி இரு பிள்ளைகளுக்கு தந்தையான மஹ்த் அஹ்மட், கடந்த 7 ஆம் திகதி வட்போர்ட் எனும் இடத்திலுள்ள தனது வீட்டிற்கு வெளியே நின்ற சமயம் கடத்தப்பட்டார்.
இந்நிலையில் அவரது விரல் பகுதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளமையானது அவர் கொல் லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
கண்காணிப்பு கருவிகளால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து மஹ்த் அஹ்மட்டின் கடத்தல் நாடகத்துடன் தொடர்புடைய 36, 33, 18 மற்றும் 17 வயதுடைய நால்வர் கைது செய் யப்பட்டுள்ளதுடன் ஏனைய இரு பெண்களும் இரு ஆண்களும் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக