அது எவ்வளவு காலத்திற்கு என்று தெரியுமா நூறு ஆண்டுகளுக்கு இதை தொடர்ந்து கட்டாமல் நிறுத்தி விட்டார்கள்!!
அதற்கு பின்னர் ஆயிரத்திற்கு மேட்பட்ட கட்டடக்கலை அனுபவசாளிகள், கட்டடம் விழாமல் தொடர்ந்து கட்ட முடியும், என்று அரசுக்கு திட்டம் தீட்டி அனுப்பினார்கள். அவர்களது வரை படத்திற்கு ஏதுவான அடிப்படையில் எட்டு மாடிகள் வரை கட்டப்பட்டன. கலிலியோவும் மாடியேறி விதவிதமான கற்களை கீழே போட்டு, புவியீர்ப்பை பற்றி சோதனை செய்தார்.
ஆனால்... பைசா கோபுரம் தொடர்ந்து சாய்கின்றது என்று தெரியவந்தது. அத்திவாரத்தை பலப்படுத்த புதுவகையில் சிமெண்ட் செய்து அத்திவாரத்திற்கு செலுத்தி பார்த்தும் பயன் இல்லை. ஆண்டுக்கு கால் அங்குலம் வீதம் சாய்ந்துகொண்டுதான் இருக்கின்றது. பல ஆண்டுகள் சழித்து ஒரு நாள் அது கீழே விழுந்து விடுமாம் பைசா கோபுரம்!
ஆனால் உடனே விழுந்து விடாது காரணம்... புவியீர்ப்புத்தானத்திலிருந்து செங்குத்தாக கோடு வரைந்தால் அது கோபுரத்தின் பேஸ் அடிப்பரப்பளவுக்குள் விழுவதால் கோபுரம் இன்னும் நிற்கின்றது!
தஞ்சாவூர் பொம்மையும் அப்படித்தான் நிற்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக