அனேகமாக விமான விபத்துக்களில் யாருமே பிழைப்பதில்லை. விபத்து எப்படி நடந்தது என்று அறிவதற்காக கண்டு பிடிக்கப்பட்ட பொருள் தான் இந்த கறுப்புப் பெட்டி உண்மையியே இது ஒரேஞ் அல்லது மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும்!
மிக வலுவான பேழையால் உருவானது இது. என்ன தான் தீயோ, அதிர்ச்சியோ தாக்காத பேழைகள். நிறைய எலெக்ட்ரானிக்ஸ் அதிலே இருக்கும். முக்கியமாக மீட்டர் ரீடிங்குகள், வேகம், உயரம், போன்ற விபரங்களும், விமான ஓட்டியும் உள்ளே வேலைசெய்பவர்களூக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகள், பூமி நிலையங்களுடன் கொண்ட தொடர்புகள் எல்லாவற்றையும் பதிந்து வைத்திருக்க்கும். ஏதாவது விபத்து நடந்தால் இந்த பேழையை எடுத்து போய் அதில் பதிந்திருப்பவைகளை கேட்டால் விபத்தின் காரணம் தெரிந்து விடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக