இதனுடன் நெல்லிக்கனி அளவு வெண்ணெய் சேர்த்து கலக்கி சிறு சூட்டுடன் குழந்தைகளுக்கு புகட்ட புண் ஆறுவதுடன் வாய் நாற்றமும் போகும்.
* தாளிசப்பத்திரியின் பட்டையைத் தண்ணீரில் தட்டிப் போட்டுக் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.
* தக்காளி அல்லது மணத்தக்காளி சமூலம் கொண்டு குடி நீர் செய்து சுண்டக் காச்சி தேவையான அளவு சர்க்கரை கூட்டி உட்கொண்டால் வாய், தொண்டை, வயிற்றுப் புண் குணமாகும்.
* கொட்டைப் பாக்கை துண்டு துண்டு களாக வெட்டி சட்டியிலிட்டு கருகும்படி வறுத்து அத்துடன் கற்பூரம் சம அளவு சேர்த்து நன்றாகப் பொடி செய்து ஒரு தே.க. சுடுநீரில் கலக்கி வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம் போகும்.
* தான்றிக் காயைச் சுட்டுச் சூரணம் செய்து சம எடை சர்க்கரை கூட்டி அரை தே.க. எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயில் நீர் ஒழுகுவது நிற்கும்.
* மணத்தக்காளி இலை 20 எடுத்து காலையில் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு அதற்கு மேல் 200 மி.லீற்றர் பால் குடித்து வந்தால் வாய்ப்புண், வாயிலிருந்து நீர் ஒழுகுவது நிற்கும்.
* அகத்திக் கீரையை தேங்காய், பருப்பு சேர்த்து உணவுடன் கலந்து நெய் விட்டு சாப்பிட்டால் வாய்ப்புண், வாயிலிருந்து நீர் ஒழுகுதல் நிற்கும்.
இதனைத் தொடர்ந்து சில நாட்கள் உட் கொள்ள வேண்டும்.
* தேங்காய்ப் பால் ஒரு அவுன்ஸ் எடுத்து அதனுடன் 10 பாதம் பருப்பை சேர்க்கவும்.ஏலக்காய் 3 எடுத்து தோல் நீக்கி விட்டு உள் ளிருக்கும் ஏல>ளிருக்கும் ஏலரிசியை நன்றாக பொடி செய்யவும். பாதாம் பருப்பை நன்றாக அரைத்து, தேங்காய்ப் பாலுடன் ஏலரிசி பொடி சேர்த்து நன்றாகக் கலக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் சம்பந்தமான எந்த நோயும் விரைவில் குணமாகி விடும்.
* சுத்தம் செய்த மாதுளம் பூக்களுடன் அதேயளவு மாதுள மரத்துப் பட்டையையும் சேர்த்து தட்டி அத்துடன் 500 மி.லீற்றர் தண் ணீர் விட்டுக் காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து இளஞ் சூடாக இருக்கும் போது அந்நீரைக் கொண்டு தொண்டை வரை நீர் செல்லுமளவுக்கு வாய் கொப்பளித்து வர வேண்டும். இவ்வாறு காலை மாலை இரு நேரங்களிலும் வாய் கொப்ப ளித்து வர வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும்.
* நாவல் மரத்துப் பட்டையை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து 200 மி.லீற்றர் அளவு தண்ணீர் விட்டு காய்ச்சி கொதிக்க வைத்து அந்நீர் இளஞ்சூடாக இருக்கும் போதே வாயிலிட்டு நன்றாக கொப்பளித்து வரலாம்.
இவ்வாறு ஒரு நாளைக்கு காலை மாலை இரு வேளை கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.
* 1/2 லீற்றல் பன்னீரில் 2 கரண்டி எலுமிச்சம் பழ இரசத்தையும் சிறிதளவில் தண்ணீரையும் கலந்து அதிகாலையில் எழுந்தவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண், ஈறு வீக்கம் தணியும்.
உணவில் குளிர்ச்சியான ஆகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். பால், தயிர், மோர் நன்கு பயன்படுத்தலாம்.
கீரை வகைகளில் அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக்கீரை, வல்லாரை, பொன்னாங் காணி, கோவை போன்றவற்றை மாறி மாறி சமையலில் சேர்த்துக் கொள்ளலாம்.
பழ வகைகள் அனைத்தும் பயன்படுத்தலாம். வில்வம் பழம் மிகச் சிறந்தது. அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பலன் கிட்டும்.
அதே போன்று பேரிக்காயும் சிறந்தது. எந்த வகையிலும் மலச்சிக்கல் ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
குடற் புண் இருப்பின் முதலில் அதற்கான பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக