பருவங்கள் பல மனிதா
யௌவன காலத்தில்
ஓடித்திந்த பருவம்!
கவலைகள் இல்லாது வாழ்ந்து
காளையான பருவம்!
கல்விக்கு வித்திட்ட
கட்டிளம் பருவம்!
பள்ளிக்கு சென்றிடும்
பாசம் ஊட்டிய பருவம்!
பாடித் திரிந்த காலமாக
பறந்தோடிய பருவம்!
தேடி உறவு கொண்ட
காதல் வந்த பருவம்!
பாசம் ஊற்றெடுத்த
நேசம் பூத்த பருவம்!
மாசில்லா மனதுக்கு
மகிழ்ச்சி தந்த பருவம்!
காதல் கனிந்த போது
கன்னத்தில் தடம் பதித்த பருவம்!
இதமான இங்கிதத்தை
அனுபவத்தை கண்ட பருவம்!
எது வந்த போதும்
எட்டி உதைத்த பருவம்!
மது போøதயால்
மறந்து போன பருவம்!
தோல்வியை வெற்றியாக
சாதனை புந்த பருவம்!
பாலிய காலமதால்
பரிதவித்த பருவம்!
சொந்தங்கள் இழந்ததால்
சோதனை கண்ட பருவம்
பந்த பாசங்கள் அறுந்ததில்
பாவியான பருவம்!
பிள்ளை பேறுபெற்று
பேரானந்தம் பூத்த பருவம்
மழலை சொல் கேட்டு
மகிழ்ச்சியுற்ற பருவம்
வயது போனதால்
வடிவு இழந்த பருவம்
தயவு இன்றி தனியாக
தவித்த தளர் பருவம்
ஏ மனிதா? நீ கண்ட
வாழ்ந்த பருவங்கள் போய்
இந்த மண்ணில் நீ வாழ
வேண்டுமா? இன்றேல்
உடப்பூர் வீரசொக்கன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக