இன்னும் நான்கு நாள்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தமிழர்களின் விடிவை நிர்ணயிக்க உள்ளது. ஆகையால் ஏனோ தானோ என்று இருக்காமல் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சிந்தித் துக் கவனத்துடன் வாக்களியுங்கள். அதன் மூலம் எமது எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்வோம். இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் யாழ்.ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை.
கிறிஸ்து உயிர்ப்பு விழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே ஆயர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக் கப்பட்டுள்ளவை வருமாறு,
நாம் கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை நினைவு கூரும் பாஸ்கா விழாவை எதிர் கொண்டுள்ளோம்.
போர் ஓய்ந்தாலும் இதனால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்துக் கும் அதிகமான மக்களுடைய துன்பங்கள் இன்னும் ஓயவில்லை. எண்பதாயிரத்துக் கும் அதிகமான மக்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட வன்னி அகதி முகாம்களிலே துயர வாழ்வை எதிர்கொண்டுள்ளார்கள். எப்போது வீடு திரும்புவோம் என்ற அங் கலாய்ப்போடு அவர்கள் நாள்களை கழிக்கிறார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வடமராட்சி பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், இன்னல்கள், சிலுவைகளில் நாமும் பங்கு கொள்ள முயல்வோம்.
குழப்பமும் சலிப்பும் இந்நிலையிலும் மீண்டும் ஒரு முக்கிய தேர்தலை நாம் எதிர்கொள்கின்றோம்.
நாடாளுமன்றத் தேர்தல் என்ற வகையில் முன்னைய தேர்தல்களை விட முக்கியமா னதும் தேவையானதுமாக இது அமைகின் றது. இத்தேர்தலில் வெற்றி பெற ஆளும் கட்சியும், மற்றவர்களும் பலமாக பிரசா ரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தேர் தலில் பெரும் எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடுவது வாக்காளர்களுக்கு பெரும் குழப்பத்தையும் சலிப்பையும் தருவதாக அமைகின்றது.
இருப்பினும் தமிழ் மக்கள் முன்னைய தேர்தல்களைப் போல இத்தேர்தலிலும் ஏனோ தானோ என்ற மனநிலையோடு நடந்துகொள்ளாது தமது விடிவை நிர்ண யிக்கும் முக்கியமான தேர்தல் எனச் சிந்தித்து போதிய கவனம் செலுத்தி தமது அரிய வாக்குகளை சீரிய முறையில் பயன் படுத்தி தமது எதிர்காலத்தை நிர்ணயித் துக்கொள்ள முன்வரவேண்டுமென விநய மாக வேண்டி நிற்கின்றோம். இதுவே இன்று சீரிய முறையில் சிந்திக்கும் அனைத்துத் தமிழ் மக்களுடைய விருப்பமாகும்.
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் பலனைக் கொடுக்கும். இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு, கிறிஸ்தவ ஆன்மீக வாழ்வின் ஊற்றாக விளங்குகின்றது. உயிர்ப்பு ஞாயிறு திரு விழாவும் இதனையே உணர்த்துகின்றது. எமது துன்பங்கள் முடிவுறும். எம் கண் ணீரை அவர் துடைத்தருள்வார். மனிதம் மீண்டும் சிறப்புறும். இதுவே உயிர்த்த ஞாயிறு எமக்கு விடுக்கும் நற்செய்தி. அனைவருக்கும் எமது உயிர்த்த இயேசுவின் அன்புமிகு வாழ்த்துக்கள் உரித்தாகட் டும் என்றுள்ளது.
ஈழநாதம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக