ஆனால், இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலேயே தற்பொழுது இச்சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.இருந்தாலும் சாட்சிகளின் பற்றாக்குறை மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு குறைந்தளவிலான தண்டனையே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் கருத்துத் தெரிவிக்கையில்;
எனது மகளின் முகத்தை நான் ஒருபோதும் பார்க்கவோ,அவதானிக்கவோ தவறியதில்லை. சம்பவத்திற்குப் பின்னர் மகளின் முகத்தில் பயத்தைக் காணக்கூடியதாகவிருந்தது.அந்நிலையில், நான் மகளிடம் என்ன விடயமானாலும் என்னிடம் கூறுமாறு கோரியதைத் தொடர்ந்தே சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.எனது மகளின் சம்பவத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் அக்கறையை அதிகரித்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக