அப்போது பெனாசிர் பிரதமராக இருந்தார். இந்த கொலையில் தற்போது பாகிஸ்தானின் ஜனாதிபதியாக இருக்கும் பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரிக்கும் தொடர்பு உண்டு என்று அப் போது முர்தசா பூட்டோவின் குடும்பத்தினர் புகார் கூறினர்.
தற்போது இதே குற்றச்சாட்டை முர்தசா பூட்டோவின் மகள் பாத்திமா பூட்டோவும் கூறியுள்ளார். முர்தசா பூட்டோ சுட்டுக் கொல்லப்பட்ட போது அவர் 14 வயது சிறுமியாக இருந்தார். தற்போது 27 வயதான இவர் ஒரு எழுத்தாளர் ஆவார்.
தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு இவர் பேட்டி அளித்தார். அதில் கூறியிருப் பதாவது, பாகிஸ்தான் சர்வாதிகாரி ஜியா உல்ஹக் ஆட்சியில் இருந்த போது எனது தந்தை வெளிநாட்டில் தங்கியிருந்தார். பெனாசிர் பிரதமரானதும் அவர் நாடு திரும்பினார். ஆனால் அதை பெனாசிர் விரும்பவில்லை.
இந்த நிலையில் எனது தந்தை உட்பட பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த 6 பேரை கடந்த 1996ம் ஆண்டு என்கவுண் டரில் பொலிஸார் சுட்டுக் கொன்றனர். இக்கொலைக்கு தற்போதைய ஜனாதிபதி சர்தாரி உடந்தையாக இருந்தார்.
எனது தந்தை கொல்லப்பட்டது குறித்து பிரதமராக இருந்த பெனாசிர் வழக்குப் பதிவு செய்ய மறுத்து விட்டார். இதன் மூலம் அவரது கொலையை அவர் மூடி மறைத்து விட்டார்.
என் தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட போது, பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவராக மசூத் ஷரீப் இருந்தார். பின்னர் அவருக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மத்திய கமிட்டியில் இடம் தரப்பட்டது.
எனது அத்தை பெனாசிர் சிறந்த ஆட்சியாளர் அல்ல. அவரது ஆட்சியில்தான் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அப்படி இருக்கும் போது அவரது ஆட்சி முஷரப் ஆட்சியைவிட எப்படி சிறந்த ஆட்சியாக இருக்க முடியும்.
முர்தசா சுட்டுக் கொல்லப்பட்ட போது பாகிஸ்தானின் ஜனாதிபதியாக பரூக் லெகாரி இருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் முர்தசா கொலையில் சர்தாரிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரின் ரத்தக்கரை சர்தாரியின் கைகளில் படிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 1993ம் ஆண்டு லர்கானா தொகுதியில் நடந்த தேர்தலில் எனது தந்தை போட்டியிட பெனாசீர் அனுமதி தராமல் மறுத்து விட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக