17 வயது Dzhennet Abdurakhmanova அவளது கணவன் Umalat Magomedov, வயது 30
ரயில்களை தகர்க்க மனித குண்டுகளாக வந்தவர்கள் 2 பெண்கள் என தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் 17 வயது இளம் விதவை என்றும், வடக்கு காகசஸ் மாகாணத்தில் உள்ள டாஜெஸ்தானை சேர்ந்தவள் என்றும் கண்டு பிடிக்கப்பட்டது.
மற்றொரு பெண் யார் என தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அவளும் யார் என அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அவளது பெயர் மரியம் ஷரிலோவா (Maryam Sharilova, 28), ஒரு பள்ளியில் கணனி ஆசிரியை ஆக பணிபுரிந்தாள். இவளை அவளது தந்தை ரசூல் மகோமெதோவ் அடையாளம் காட்டினார். மனித குண்டுகளாக செயல்பட்ட பெண்களின் புகைப்படம் ரஷ்ய பத்திரிகைகளில் பிரசுரமாகி இருந்தது.
அதை பார்த்து அவளது தந்தை அடையாளம் காட்டினார். குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த மார்ச் 29ம் திகதிக்கு பிறகு திடீரென தனது மகள் காணாமல் போனதாக அவர் தெரிவித் துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக