இந்த மிளகாய் ரகத்துக்கு ‘இனிபினிட்டி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இனிபினிட்டி என்றால் முடிவு இல்லாதது என்று அர்த்தம். இதை தின்றால் ஏற்படும் வேதனைக்கு முடிவு கிடையாது என்பதால் தான் இதற்கு இப்படி பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதை சாப்பிடுவதால் ஏற்படும் வேதனையை பால் குடித்தோ, மாத்திரையை தின்றோ தணிக்க முடியாதாம்.
இதன் காரத்தை ஸ்கோவில்லே அளவுகோல்படி ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 286 என்று அளந்து இருக்கிறார்கள். போர்க் களங்களில் ஆயுதமாக பயன்படுத்தப்படும் மிளகு ஸ்பிரேயின் காரம் இந்த அளவுகோலின்படி 2 இலட்சம் ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக