அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு, வெளிநாட்டு சேவை, சர்வதேச வளர்ச்சித் திட்டங்களுக்கான சேவைகளை அளித்து வரும் ஒரு நிறுவனம் டின்கார்ப் (DynCorp).
இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டுவரை 95 சதவீதமான இலங்கையர்கள் தொழில் புரிந்தார்கள். ஆனால் இந்த வருடம் 85 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இதில்உள்ளனராம்
மேலும், இலங்கையில் இருந்து தொழிலாளர்களை புதிதாக வேலைக்கு அமர்த்துவதை அந்த நிறுவனம் தற்போது நிறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த நிறுவனத்தில் பெரும்பான்மையாக தொழில் புரிந்த சிங்களர்கள், அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த தமிழர்களிடம் இன விரோதம் காட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகளும் சிங்களர்களுக்கு கல்தா கொடுக்கப்பட காரணமாம்.
இந்த நிறுவனத்தின் கத்தார் பிரிவில் 550 தொழிலாளர்களில் 525 பேர் இலங்கையர்கள். இதில், 47 பேர் இலங்கைத் தமிழர்கள். இங்கு தான் அதிகமாக இன விரோத நடவடிக்கையில் சிங்களர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
இப்படிப்பட்ட பின்னணியில்தான், இலங்கையில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டாம் என டயன்கார்ப் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசுத் தரப்பிலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
இதன் காரணமாக 1200 சிங்களர்களுக்கு மேல் இருந்த இந்த நிறுவனத்தில் தற்போது அவர்களின் எண்ணிக்கை 800 பேராக குறைந்துள்ளதாம்.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக