2005 டிசம்பர் மாதம் இந்தியாவின் பீகார் அராரியா பகுதியில் பிறந்த லக்ஷ்மி டடமா எனும் சிறுமி அதிசயமான பிறவியாக கருதப்படுகிறார். இவருக்கு நான்கு கால்களும் 4 கைகளும் உள்ளன.
என்ன நம்ப முடியவில்லையா. பிறக்கும்போதே மேலதிக கால்கைகளுடன் பிறந்த லக்ஷ்மி பார்ப்பதற்கு மனித ஒக்டோபஸ் போல இருந்தார்.
இந்த அதிசயச் சிறுமியால் நடக்கவோ தனியாக எந்த காரியங்களையும் செய்யவோ இயலாது. இவர்களின் பெற்றோர் அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்பவர்கள். அதனால் தமது மகளுக்கு சிகிச்சை செய்ய முடியாத நிலை.
இவளின் அதிசயிக்கத்தக்க உடலமைப்பினால் இவளை லக்ஷ்மியின் அவதாரமாக நினைத்து சிலர் வழிபடவும் செய்தனர்.
30 நிபுணத்துவ மருத்துவர்களின் பங்களிப்புடன் இவருக்கு பங்களூர் ஆஸ்பத்திரியில் 24 மணிநேர சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. வெற்றிகரமாக நடந்த சத்திர சிகிச்சையை அடுத்து இவரின் மேலதிகமாக உள்ள கால் கைகள் அகற்றப்பட்டன.
தற்பொழுது ஏனைய சிறுமிகள் போல மாறி விட்டாள் லக்ஷ்மி. இவள் நடக்கவும் செய்கிறாள். இப்பொழுதெல்லாம் அவளை யாரும் கடவுள் அவதாரமாக கருதுவதில்லையாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக