47 அங்குலம் மற்றும் 43 அங்குல நீளமுள்ள இந்த வெள்ளரிக்காய்களை “கின்னஸ்' உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
43 அங்குல நீளள்ள வெள்ளரிக்காய் தொடர்ந்து வளர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விட்டில்ஸே எனும் இடத்தைச் சேர்ந்த 78 வயதான கிளேயர் பியர்ஸ் ஓய்வு பெற்றதன் பின் தோட்டச் செய்கையை பொழுது போக்காக மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் காலாவதியான பொதியொன்றிலிருந்த வெள்ள விதைகளை, அவை முளைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமலே தோட்டத்தில் விதைத்துள்ளார்.
எனினும் அவ்விதைகள் சிறந்தபடி முளைத்து மிகவும் நீண்ட வெள்ளரிக்காய்களைத் தந்துள்ளமை கிளேயர் பியர்ஸை ஆச்சரியத்தில் ஆழ்த்தி யுள்ளது.
இந்த நீண்ட வெள்ளரிக்காய்களின் விளைச்சலுக்காக எதுவித விசேட பயிர்ச்செய்கை முறையையும் கையாளவில்லை என கிளேயர் பியர்ஸ் தெரிவித்தார். அவரது தோட்டத்தில் விளைந்த இந்த வெள்ளரிக்காய்கள், இரு வருடங்களுக்கு முன் ஒக்ஸ்போர்ட்ஷியரைச் சேர்ந்த பிராங் திம்மொக் என்பவரது தோட்டத்தில் விளைந்து “கின்னஸ்' உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 41 அங்குல (3.4 அடி) நீளமான வெள்ளரிக்காயின் சாதனையை முறியடித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக