2008 ஆம் ஆண்டு நடுப் பகுதிக்கும் 2009 ஆம் ஆண்டு நடுப்பகுதிக்கும் இடையே அரசாங்க படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சண்டை உக்கிரமடைந்த போது இராமை போன்ற சிவிலியன்கள் சண்டைக்குள் அகப்பட்டுக் கொண்டார்கள். 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சண்டையிலிருந்து தப்பி இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம் ஒன்றினுள் அநேகமாக ஒன்றரை வருடங்களை க ழித்த பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே அவரது சொந்த இடமான கிளிநொச்சிக்கு திரும்பினார்.
இருந்த போதிலும் இராமை வாழ்ந்த வீடு அமைந்துள்ள பொன்னகர் பகுதியில் புதைக் கப்பட்ட கண்ணி வெடிகள் இன்னமும் அகற்றப்படாததால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. ““ஆதலால் கண்ணி வெடிகள் அகற்றப்படும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்'' என்று இராமை கூறுகிறார். தற்போதைக்கு இராமை ஒரு கூடாரத்தில் வசித்து வருகிறார்.
குண்டு வெடிப்புகளுக்கும் துப்பாக்கி சூடுகளுக்கும் அஞ்சி ஓடித் திரிவதிலும் பார்க்க அல்லது இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் பார்க்க இந்த கூடாரத்தினுள் வாழ்வது எவ்வளவோ பரவாயில்லை என்றும் இராமை தெரிவித்தார்.
முகாம் வாழ்க்கையிலும் பார்க்க கூடார வாழ்க்கையில் அவரது குடும்பத்துக்கென எவ் வளவோ தனிமை உண்டு. தெற்காசிய தீவு நாடான இலங்கையில் அநேகமாக மூன்று தசாப்தகால யுத்தம் முடிவடைந்த நிலையில் தற்போது தமது குடும்பத்திற்கென ஒரு புதிய வீட்டை கட்டிக் கொள்வதே அவரது கனவாகும்.
கெட்ட காலம் முடிந்து விட்டது. நீண்ட கால பீதி வாழ்க்கைக்கு ஒரு முடிவு வந்துள்ளது. தற்போது ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு அதிலிருந்து குண்டுகளுக்கு பயந்து அங்கும் இங்கும் ஓடித்திரியாமல் நிரந்தரமாக வசிக்கலாம் என்று இராமை நிம்மதிப் பெருமூச்சுடன் கூறினார். வன்னியில் குறைந்தது 160,000 வீடுகளாயினும் புதிதாக கட்டப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மதிப்பீடுகள் தெரிவிக் கின்றன. வன்னி பிராந்தியத்தில் ஜூலை மாத நடுப்பகுதி வரை 3,200 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்த ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மேலும் 2,100 வீடுகளின் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு கட்டங்களில் உள்ளன என்றும் கூறியுள்ளது.
அந்த பிராந்தியத்தில் வீடமைப்பே மிகப் பெரும் தேவையாக இருக்கிறது. குறிப்பாக இப்பொழுது யுத்தத்தினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி இருப்போர் தொகை 30,000 க்கும் குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இராமை போன்று 280000 க்கும் அதிகமானோர் முகாம்களிலிருந்து வெளியேறினர். சுமார் 200000 பேர் அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளார்கள் அல்லது வேறெங்காயினும் தங்கி உள்ளார்கள். ஏனையோர் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் தங்கியுள்ளனர்.
சொந்த இடங்களுக்கு திரும்பியவர்களுக்கு வீடு கட்டுவதற்காக 325,000 ரூபா தருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகைக்காக தாங்கள் காத்திருப்பதாக இராமை தெரிவித்தார். இந்த பணத்தைக் கொண்டு 6 மாதங்களில் 46.45 சதுர மீற்றர் பரப்பளவுள்ள வீட்டை கட்ட முடியும் என்று ஐக்கிய நாடுகள் வீடமைப்பு நிர்மாணம் தொடர்பான குழு உறுப்பினர் ஒருவர் தெவித்தார்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இத்தகைய 10,000 வீடுகளை கட்டுவதற்கான வடக்கு கிழக்கு வீடமைப்பு திட்டமொன்றை அரசாங்கம் அமுல் செய்து வருகிறது. ஐக்கிய நாடுகள் வாழ்விட திட்டப் பிவு 4,000 வீடுகளை கட்ட இருக்கிறது. இந்திய அரசாங்கம் வடக்கு கிழக்கில் 50,000 வீடுகளை புனர் நிர்மாணம் செய்வதற்கு நிதி வழங்க இணங்கியுள்ளது. ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் சர்வதேச சமுகத்திடமிருந்து உதவி நிதிகள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக புனர் நிர்மாண பணிகளும் தாமதமடைகின்றன.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இந்த வருடம் இலங்கைக்கு வழங்குவதற்கென இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 165 மில்லியன் அமெக்க டொலர் பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது. இதுவரை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் யுத்தத்திற்கு பின்னரான அதன் திட்டங்களுக்கென 120 மில்லியன் டொலரை பெற்றுள்ளது.
எல்லா பிரிவுகளிலும் பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார மீட்பு, உட்கட்ட மைப்பு, நீர் சுத்திகரிப்பு, விவசாயம் சுகாதாரம் என்பவற்றிலான பற்றாக்குறைகள் மிக அதிகமானவை என்று ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வெளியான ஐக்கிய நாடுகள் நன்கொடை தொடர்பான அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வன்னி பகுதியில் செய்வதற்கு அநேகம் உண்டு என்று ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவர் தெவித்தார். ஐக்கிய நாடுகள் இலங்கைப் பிர திநிதி நன்கொடை நாடுகளுக்கு விடுத்த வேண்டுகோளில் இலங்கை நிலைமை மோசமாக இருப்பதால் நீங்கள் தொடர்ந்து உதவி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
உண்மையில் தேவைகளின் பட்டியல் மிக நீளமானது. ஐக்கிய நாடுகள் பதிவுகளின்படி குறைந்தது 96,000 கழிவறைகள் திருத்தியமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. 60,000 க்கும் மேலான கழிவறைகள் புனரமைக்கப் பட வேண்டும். 61,000 புதிய கிணறுகள் தோண்டப்பட வேண்டும். வீதிகள், போக்குவரத்து வசதிகள் விசேடமாக வன்னி பின்தங்கிய பகுதிகளில் கவனிக்கப்பட வேண்டிய நிலைமையில் உள்ளன. இதேவேளை கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது.
வன்னி பிரதேசத்தில் 240 க்கும் அதிகமான பாடசாலைகள் ஜூலை மாத பிற்பகுதியிலிருந்து மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. வன்னியில் 25,000 க்கும் அதிகமான குடும்பங்கள் விவசாயச் செய்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான உதவியை பெற்றுள்ளன.
விரைவில் இந்தத் தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் 2010 ஆம் ஆண்டு முடிவதற்குள் 60 702 ஹெக்டேயருக்கும் அதிகமான விவசாய காணிகளில் மீண்டும் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்படும் என்றும் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இருந்தும் இந்த திட்டங்கள் பலவற்றின் வெற்றி யுத்த மேகங்கள் கலைந்து நீண்ட நாட்களாகியும் புனர்வாழ்வுக் காலத்தில் நிதிகள் தொடர்ந்து கிடைப்பதில்தான் தங்கியுள்ளது.
செய்வதற்கு அநேகம் உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அண்மையில் சொந்த இடங்களுக்கு திரும்பிய மக்கள் இன்னமும் பலவீனமான நிலையிலேயே இருந்து வருகிறார்கள் என்று பூனே சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அதன் செயற்பாடுகள் சிலவற்றை இலங்கையில் குறைத்து விட்டது. வேலைகள் பூர்த்தி அடைந்து விட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்த போதிலும் கடந்த 9 மாதங்களில் மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம், கிழக்கு பிரதேசத்தில் இயங்கி வந்த அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயம் ஆகியன மூடப்பட்டுள்ளன. இன்னம் இத்தகைய செய்திகள் இராமை போன்றவர்களை கவலை கொள்ள வைக்கின்றன.
““நாங்கள் நீண்ட காலமாக சொல்லொணா துன்ப துயரங்களை அனுபவித்து விட்டோம்.
புனர்நிர்மாண நடவடிக்கைகள் தொடருமானால் இப்போதாவது உள்ளதைக் கொண்டு சமாளித்து நிம்மதியாக வாழ எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.
(ஐ. பி. எஸ்.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக