இது குறித்து ஹடிசி கூறுகையில், “நான் பள்ளிக்கு செல்லும் போது சக மாணவர்கள் என் உயரம் குறித்து கிண்டல் செய்வார்கள். ஆனால், குள்ளமாக இருப்பதை எண்ணி நான் கவலை பட்டதில்லை. என்றாவது ஒரு நாள் இதற்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. உலகின் குள்ளமான பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. குள்ளமாக இருந்து சாதனை படைத்து பிரபலமானது மூலம், தற்போது நான் உயர்ந்த இடத்தில் இருப்பதை உணர்கிறேன். மேலும் உலகின் பிரபலமான பல்வேறு மனிதர்கள் குறிப்பாக உலகின் உயர்ந்த மனிதரை சந்திக்க விரும்புகிறேன்Ó என்று ஹடிசி தெரிவித்தார்.
அவரது பெற்றோர் இப்ராகிம், ஹடன் கூறுகையில், எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் மற்ற குழந்தைகள் பிறக்கும் போது இருப்பது போன்றுதான் ஹடிசியும் இருந்தாள்.
ஆனால் நாளடைவில் அவளின் வளர்ச்சி தடைபட்டது. அதற்கு எலும்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பே காரணம் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். இருப்பினும் வீட்டில் தங்களுக்கு சிறு, சிறு இயன்ற வேலைகளை அவள் செய்து கொடுப்பாள் என்று அவர்கள் தெரிவித்தனர்.







































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக