திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தைச் செல்வம் இல்லாத நிலையில் லிஸா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத் தப்பட்டார்.
அவரது கருப்பையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக அவர் இயற்கையாக கருத்தரிப்பது சாத்தியமில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கவும், லிஸா செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தையொன்றைப் பெற்றுக் கொள்ள தீர்மானித்தார்.
1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயற்கை கருத்தரித்தலுக்காக அவர் மிட்லாண்ட் இனவிருத்தி மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவரின் கருப்பையிலிருந்து 24 கரு முட்டைகளை எடுத்து அட்றியனின் விந்தணுக்களுடன் இணைத்து கருக்கட்டல் செயற்கிரமத்துக்கு உட்படுத்தினர்.
இதன்போது 14 கருமுட்டைகள் வெற்றிகரமாக கருத்தரித்து சிசுக்களாக உருவெடுத்தன.
அவற்றில் இரு சிசுக்கள் மட்டும் லிஸாவின் கருப்பையில் உட்பதிக்கப்பட்டு வளர செய்யப்பட்டன. ஏனைய 12 சிசுக்களும் உறை குளிரில் சேமிக்கப்பட்டன.
இந்நிலையில் லிஸா 1999 ஆம் ஆண்டு வால்ஸால் மனோர் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார்.
அக்குழந்தைகளுக்கு முறையே மெகான் , பெதானி என பெயர் சூட்டப்பட்டது.
மெகானுக்கும் பெதானிக்கும் 10 வயதான போது பிறிதொரு குழந்தையை பெற்றுக் கொள்வதற்கு லிஸாவும் அட்றியனும் விரும்பினர்.
இந்நிலையில் உறை நிலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சிசுக்களைப் பயன்படுத்தி மீளவும் கர்ப்பம் தரிக்கும் முயற்சியில் மேற்படி தம்பதி இறங்கியது.
இத்தனை வருட காலம் உறை நிலையில் பேணப்பட்ட சிசு மூலம் குழந்தையைப் பிரசவிப்பது எந்தளவுக்கு சாத்தியம் என்பது குறித்து லிஸாவுக்கும் (37 வயது) அட்றியனுக்கும் (45 வயது) சந்தேகமாக இருந்தது. எனினும் லிஸாவின் கருப்பையில் பதிக்கப்பட்ட சிசு வெற்றிகரமாக வளர்ச்சியடைந்து கடந்த மாதம் ஆரோக்கிய மான குழந்தையாக பிறந்தது. அக்குழந்தைக்கு ரைலெஹ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக