இங்கிலாந்தின் மெர்சிசைட் பகுதியின் சவுத்போர்ட் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ் கார்பீல்டு. இவரது காதலி ஜென்னி. சேர்ந்து வாழ்கின்றனர். ஜென்னி நிறைமாத கர்ப்பமாக இருந்தார். நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்ல முயன்றனர்.
ஆனால், வீட்டின் கதவை திறக்க முடியாத அளவுக்கு பனி கொட்டிக் கிடந்தது.
தாமதிக்க விரும்பாத கிறிஸ், தனது ஐபோனில் இன்டர்நெட்டை தொடர்பு கொண்டார். பாதுகாப்பாக பிரசவிப்பது எப்படி என வெப்சைட்களில் தேடினார். அவற்றை படித்துக் காட்டினார்.
அதன்படி, ஜென்னி பெண் குழந்தையை வீட்டிலேயே தானாக பெற்றெடுத்தார். இதுபற்றி கிறிஸ் கார்பீல்டு கூறுகையில், ‘‘வீட்டை விட்டு வெளியேற முடியாத மோசமான வானிலை. என்ன செய்வதென்று திகைத்தேன். உடனே, இன்டர்நெட் நினைவுக்கு வந்தது. அதை தொடர்பு கொண்டதும் எல்லாமே விரைவாக நடந்து முடிந்தது. எல்லாரும் எங்களை பாராட்டுகின்றனர்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக