சிறிய கண்ணாடி துண்டில் தயாரிக்கப்பட்ட அதன் உயரம் 290 மைக்ரோ மீட்டர். அகலம் 200 மைக்ரோ மீட்டர் (ஒரு மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பங்கு மைக்ரோ மீட்டர்). உதாரணத்துக்கு, மனிதனின் தலைமுடியின் சுற்றளவு 100 மைக்ரோ மீட்டர்கள்.
அதாவது, இந்த வாழ்த்து அட்டை போல 8,276 அட்டைகளை ஒரு அஞ்சல் தலை (ஸ்டாம்ப்) வைப்பதற்கான இடத்தில் அடுக்க முடியும். இதுபற்றி விஞ்ஞானி டேவிட் கம்மிங் கூறுகையில், ‘‘நானோ தொழில்நுட்பம் எவ்வளவு எளிதானது என்பதை விளக்குவதற்காக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை அந்த தொழில்நுட்பத்தில் தயாரித்தோம்.
டிவி, கேமராவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைதான் இதில் பயன்படு த்தினோம். உலகின் சிறந்த நானோ தொழில்நுட்பத்தை எங்கள் பல்கலைக்கழகம் பின்பற்றுகிறது. ஆனால், அதுபற்றி மக்களிடம் விளக்குவதில் இதுபோன்ற தயாரிப்புகள் தேவைப்படுகிறது’’ என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக