மிகவும் இரகசியமானதும் முக்கியத் துவம் மிக்கதுமான ஒரு பாத்திரத்தை இந்திய உளவு நிறுவனம் ‘றோ’ ஆற்றியதாக (The Tiger Vanquished - LTTE’s Story) என்ற இவரது நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்நூலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1998-99ம் ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கமே, இலங்கை விடயங்களில் மீண்டும் நேரடியாகத் தலையிடும் கொள்கை முடிபை எடுத்திருந்தது. அப்போதைய இந்தியப் பாதுகாப்புச் செயலரும் அனு பவம் மிக்க இராஜதந்திரியுமான ப்ரா ஜேஸ் மிஸ்ராவின் மேற்பார்வையில் நோர்வேயின் சமாதானப் பேச்சுவார்த்தை களில் இந்தியா இரகசியப் பங்காற்ற முனைந்தது.
இலங்கை தொடர்பான இந்திய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டவுட னேயே இந்தியாவின் வெளியக உளவுப் பணிகளை மேற்கொண்ட றோ அமைப் பின் தலையீட்டை இந்திய அரசு வேண்டி யது. ஆனாலும் இப்பேச்சுவார்த்தை களில் நோர்வேயின் சார்பில் ஆரம்பம் முதல் முக்கிய பாத்திரத்தை வகித்த எரிக் சொல்யஹய்ம், இப்பேச்சுவார்த்தை களில் இந்திய உளவு நிறுவனத்தின் மறைமுகப் பங்கு தொடர்பாக எவ்விதக் கருத்தையும் தெரிவிக்க மறுத்துள்ளதாக இந்நூல் தொடர்பான கட்டுரையயான்றை எழுதியுள்ள நோர்வே நாட்டுப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
‘நான் இப்பேச்சுவார்த்தைகள் தொடர் பாக இந்தியாவுடன் நெருங்கிய தொடர் பைக் கொண்டிருந்தேன்என்பது உண்மை. ஆனால் இது தொடர்பாக இந்திய வெளிநாட்டமைச்சு அதிகாரிகளையும் பாதுகாப்புச் செயலரையும் மட்டுமே சந்தித்தேன்’ என எரிக் சொல்யஹய்ம் குறிப்பிடுகின்றார். ‘இந்தியாவின் தீவிரமான பங்குபற் றலின்றி நாம் இதில் வெற்றி பெற்றி ருக்க முடியாது. போர்நிறுத்தம் முதல் பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு விடய முமே இந்தியாவின் பங்கு இன்றி முயற்சிக்கப்படவில்லை’ என்கிறார் நோர் வேயின் முன்னாள் பிரதி வெளிநாட் டமைச்சர் விதார் யஹல்கிசன். விடுதலைப் புலிகள் மீது இந்தியா எவ்வித கருணையும் கொண்டிருக்க வில்லை. மாறாகப் புலிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்த இலங்கையின் சிறப்புப் படைப்பிரிவிற்கு இந்தியா பயிற்சியளித்து உதவியது.
‘பேச்சுவார்த்தையின் பல நடை முறை விடயங்கள் குறித்து நோர்வே இராஜதந்திரிகளுடன் இந்திய உளவு நிறுவன அதிகாரிகள் கலந்தாலோசனை செய்திருந்தனர். ஆனாலும் இந்திய உளவு நிறுவனமான ‘றோ’ ஆற்றிய பங்கின் ஆழம் தொடர்பாக விடுதலைப் புலிகள் சரியாகப் புரிந்து கொண்டிருக்க வில்லை’ என நாராயண் சுவாமி மேலும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். நூலாசிரியர் நாராயண் சுவாமி இந்திய உளவு நிறுவனமான றோவின் முகவராகக் கருதப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக