ஆரம்பத்தில் ஒரே ஒரு முள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பின்னர் காலப் போக்கில் மணி, நிமிடம், நொடி என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான முட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கடிகாரமானது வட அரைக் கோளத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது பூமியின் நடுப்பகுதியில் செல்லும் பூமத்திய ரேகையின் மேற் பகுதியில் வாழ்ந்த மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள், சூரியக் கடிகாரத்தின் நிழல் செல்லும் பாதையைப் பின்பற்றி, முட்களின் திசையையும் வலப்பக்கமாக அமைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக