சனி, 1 ஜனவரி, 2011

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு

இன்று விஞ்ஞானத்திற்குச் சவால் விடும் கேள்வி இதுதான். இதற்கு விடை கிடைத்து விட்டால் நிச்சயமாக 60 ஆயிரம் கோடி ரூபாவில் தீபாவளி கொண்டாத் துணிய மாட்டார்கள்.

காலம் என்பது என்ன?

போன விநாடி, இந்த விநாடி அடுத்த விநாடி இப்படி தான் நாம் காலத்தை எதார்த்தமாக சொல்வோம். விஞ்ஞானிகள் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக அணுவுக்குள் அணுதுணிக்கைகளின் அலைவீச்சு அளவை வைத்து மிகச்சிறு விநாடிகளாக சொல்வார்கள்.

நாம் தனி ஊசலின் அளவை விநாடி என்கிறோம். அணுவியல் விஞ்ஞானிகள் அணுதுணிக்கை அலை வீச்சை விநாடி என்கிறார் கள் அளவு தான் வித்தியாசமே தவிர இயக்கம் ஒன்றுதான்.

சரி அலைவீச்சு தான் காலமா? இல்லை. அலைவீச்சு என்பது நமக்கு காலத்துக்கான ஒரு அளவீடு. அதாவது காலத்தை அளக்க அல்லது தெரிந்து கொள்ள நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு அளவீடு.

காலத்தை விநாடி, மைக்ரோ செக்கன், நனோ செக்கன் என்ற அளவீடுகளை வைத்து கணிக்கி றோம். அல்லது அடையாப்படுத் திக் கொள்கிறோம்.

காலத்தை அளக்கும் கருவிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட அலை வீச்சை வைத்தே இயங்குகின்றன. அதாவது காலத்தை அளவிடு கின்றன.

அலை வீச்சு என்பது என்ன எனப் பார்ப்போம்.

அலைவீச்சு என்பதை முதலில் குவாண்டம் தத்துவத்தில் பார்க்கலாம்.

ஒளியின் இயக்கத்தை தான் குவாண்டம் தத்துவத்தில் அலைவீச்சாக குறிப்பிடுகிறார்கள்.

ஒளி என்றால் துணிக்கையும் அலையும் மாறிமாறி வரும் ஒரு நிலை, கண்ணொளி, சூரிய ஒளி, மின்காந்த ஒளி இவையெல்லாம் ஒளியின் வகைகள் அதாவது துணிக்கையும் அலையும் மாறிமாறி வரும் நிலையின் வகைகள்.

துணிக்கையும் அலையும் மாறி மாறி வருவது அதாவது ஒன் (on), ஒஃப் off இதுதான் ஒளி. இதன் இயக்க வித்தியாசத்தையும் அறிவையும் பொறுத்து ஒளியின் வகைகள் மாறுபடும். அந்த மாறுபாடுகளை தான் நாம் இண் ஒளி, லேசர் ஒளி, எஃஸ் கதிர்கள், சூரிய ஒளி, கண்ணுரு ஒளி எனவெல்லாம் பெயரிட்டு அழைக்கிறோம்.

சரி அப்படி ஒன் (on) , ஒஃப் off ஆக மாறுவது எது என கேட்டால் இப்போதைக்கு பொருள் வெளி என எடுத்துக் கொள்ளுங்கள். பொருளாக இருப்பது என்ன என்பது குறித்து அறிவு விளக்கப் பகுதியில் பார்க்கலாம். பொருள் இருக்கிறது (on) , இல்லை
off இதுதான் ஒளி. இந்த இயக்கம் தான் மின்காந்த அலைகள், அணுக்கரு உட்பட எல்லா ஆற்றல்களிலும் இருக்கிறது. பொருள்களிலும் இருக்கிறது. இங்கு ஒளியின் இயக்கம் குறித்து ஒரு எதார்த்த ஐயம் வரலாம்.

ஒன் ஒஃப் தான் ஒளி என்பது சரி. ஆனால் எது எப்படி நகர்கிறது? ஒளியின் வேகம் என்றெல்லாம் சொல்கிறார்களே அது எப்படி இடம்பெயர்கிறது?

உதாரணத்தில் விளக்கலாம். நிலையாக இருக்கும் ஒரு கடுகை (துணிக்கை) நாம் கண்ணால் பார்க்கிறோம். அது நிலையாக இருக்கும் போது கடுகு பொருள். அதை சுற்றியுள்ள பகுதி வெளி, இங்கு இனி கடுகு திசைவேகத்தில் இயங்குவதாக எடுத்துக் கொள்வோம். கடுகு நகர்கிறது அப்போது நாம் மேல் சொன்ன தத்துவப்படி கடுகு மறைந்து அங்கு வெளி வரவேண்டும். வெளி மறைந்து கடுகு வர வேண்டும் கடுகு நகரக்கூடாது. தோன்றி மறைய வேண்டும் அப்படி தானே. ஆம் அது தான் அங்கும் நடக்கிறது.

கடுகு நகருகையில் நமது பார்வையும் நகர்கிறது. அப்போது கடுகு வெளியை விலக்கி செல்வதாக நாம் அறிகிறோம். ஆனால் அங்கு நமது பார்வை நகரவில்லை கடுகு மட்டும் நகர்வதாக வைத்துக் கொள்வோம். நாம் அறிவது என்ன? கடுகு மறைந்து விட்டது அவ்வளவு தான். நமது பார்வையும் நகர்வதால் கடுகு தோன்றி மறையாமல் நகர்வதாக நாம் அறிகிறோம்.

கணனி மொழி தெரிந்தவர்களுக்கு இது எளிதில் புரியும் கனணி வன்தட்டு அல்லது கைத்தொலைபேசியின் சிம், மெமரி காட்களில் இந்த இயக்கத்தை நேரடியாகவே புரிந்து கொள்ளலாம். ஒரு புள்ளி அணைந்து மறுபுள்ளி தோன்றுவதில் தான் கணனி மற்றும் மெமரிக்கார்டின் அடிப்படை மொழி (இயக்கம்) இருக்கிறது.

சரி அலைக்கு வருவோம், பொருள் துணிக்கை அணைந்து மறைந்து மற்ற துணிக்கைகள் வருகிறது. ஆனால் அது எப்படி நகர்கிறது? அங்கு தான் அலை தத்துவம் புரியக்கிடக்கிறது.

அலை என்றால் அதற்கு எல்லை கிடையாது அதே நேரத்தில் பொருளுக்கு எல்லையும் மையமும் இருக்கிறது. ஒரு பொருள் அலையாகும் போது அது தனது மையத்தையும் எல்லையையும் இழந்து விடுகிறது. மீண்டும் அது பொருளாகும் போது சூழலுக்கு ஏற்ப அதாவது வெளிக்கும் பொருளுக்கும் உள்ள அறிவுக்கு ஏற்ப மையத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக் கொள்கிறது.

உதாரணமாக ஒரு கல்லை கிழக்கு நோக்கி நாம் நகர்த்ததக்க ஆற்றலை கொடுக்கும் போது, அதன் இயக்கம் (வெளியாகி மீண்டும் பொருளாகுகையில்) கிழக்கு நோக்கி நகரக்கூடிய அறிவை கிரகித்தே கிழக்கில் மீண்டும் தன் மையத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக் கொள்கிறது. இது தான் அடிப் படை நகர்ச்சிக்கான தத்துவம்.

அடுத்து காலம் பற்றிய அடிப்படைக்கு போவோம்.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. இது அல்லாமல் காலம் என எதுவும் இல்லை. காலம் என ஒன்று தனியே இல்லை. காலம் ஒரு மாயையே அல்லாமல் உண்மை அல்ல.

சரி உதாரணங்களுடன் பார்ப்போம்.

பொருளும் வெளியும் பரஸ்பரம் நிலைமாறுவது இயக்கம். இந்த இயக்கத்தின் படிப்படியான நிலைகளின் அளவீடை தான் காலம் என்கிறோம். இந்த அளவீடு என்பது அளக்கும் அல்லது அறியும் பொருளை பொறுத்தது. இதற்கு ஐஸ்ஸ்டீனின் சார்பியல் தத்துவமே மிகச்சிறந்த ஆதாரமாக இருக்கிறது.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. அது அளக்கும் அல்லது அறியும் கருவியை (பொருளை) பொறுத்தது என்பது சரி.

ஆனால் நமக்குள் இங்கு எதார்த்தமாக எழும் ஐயம்.

ஒரு விதை செடியாகி மரமாகி பூவாகி காயாகி விதையாகிறது. இது ஒரு காலசுற்று ஆனால் உயிரற்ற பொருட்களின் அப்படி இல்லையே, கல் மண்ணாகிறதே தவிர மண் மீண்டும் கல்லாவதில்லையே.

இங்கு தான் அறிவு தேவைப்படுகிறது.

நம்முடைய (மனிதனுடைய, உயிரிகளுடைய) அறிவு வளர்ச்சிதைவோடு ஒத்துப்போய் விட்டது.

ஒரு திரைப்பட சுருளை பின்னோக்கி சுற்றினால் இயக்கங்கள் பின்னோக்கி வந்தவண்ணமே நகர்கிறது. ஆனால் நமது எதார்த்த வாழ்க்கையில் அது சாத்தியப்படுமா? அதாவது குழந்தை குமரனாகி கிழவனாது போல, அதே சீரோடு அச்சு பிழையாமல் கிழவன் குமரனாகி குழந்தையாக முடியுமா?

இது கொஞ்சம் அநாகரீகமான உதாரணம் தான். ஆனால் புரிந்து கொள்வதற்கு எளிதானது. நாம் காலையில் உண்ட உணவு கழிவாகிறது. அதை பின்னோக்கி இயக்கினால் அதே கழிவு சென்ற அதே பயணத்தில் பாதையில் மீண்டும் உணவாகுமா?

இதற்கு பதில் ஆம் என்பதுதான். அதாவது காலசக்கரத்தை பின்னோக்கி சுழற்ற முடியும் என்பது தான் பிரபஞ்ச ரகசியம்.

நம்முடைய அறிவின் பயணம் (இயக்கம்) முன்னோக்கி மட்டும் செல்வதால் நமக்கு காலமும் முன்னோக்கி செல்கிறது. அறிவை நீங்கள் எந்த திசையில் திருப்பினாலும் அதே திசையில் காலமும் இயக்கமும் இந்த பிரபஞ்சமும் திரும்பும்.

இந்த ரகசியத்தை தான் ஆன்மீகஞானிகள் நமக்கு மெய்ஞானமாக போதித்துள்ளார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல