விக்கிலீக்ஸ் நிறுவனம் முதலில் ‘விக்கி’ என்ற பெயரில்தான் ஆரம்பிக்கப்பட்டது. ‘விக்கி’ எனும் வார்த்தைக்கு, ஹவாய் மொழியில் வேகமாக அல்லது விரைவாக என்று பொருள். கணனி மொழியில் பார்த்தால், உலகில் உள்ள எந்த ஒரு சர்வரும் இந்த இணையத்தளத்தை எளிதில் பயன்படுத்த முடியும் என்பதாகும்.
ஆங்கிலப் பேரகராதியில் ஒரு வார்த்தை இடம்பெற வேண்டுமானால் அது 30 கோடி முறைகள் ஊடகங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என கடந்த 2006ல் உலக மொழி கண்காணிப்பகம் வரையறுத்திருந்தது. குறிப்பிட்ட வார்த்தையின் முழுவிபரமும், புவியியல் வரலாறு மற்றும் பயன்பாடு பற்றியும் தெரிந்தால்தான், உலக மொழி கண்காணிப்பதால் அது அங்கீகரிக்கப்படும்.
ஆங்கிலப் பேரகராதியில் இடம்பெற வேண்டுமானால், ஆங்கிலம் பேசும் 100 கோடிக்கு அதிகமான மக்களுக்கும் புரியும்படி அதுபற்றிய விபரம் 25 ஆயிரம் முறைகளுக்கு மேலாக வெவ்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆங்கிலம் மீது பிறமொழிகள் ஆதிக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்த, எந்த ஒரு மொழியியல் நிறுவனமும் கிடையாது.
இதனால், பிறமொழி சொற்கள் எளிதில், ஆங்கில பேரகராதியில் சேர்க்கப்படுகின்றன. அதேசமயம், அந்த வார்த்தை தொடர்பான அனைத்து விவரங்களும் கிடைக்கப்பெற வேண்டும். அந்த வகையில் பார்க்கும் போது ‘விக்கிலீக்ஸ்’ விரைவில் ஆங்கிலப் பேரகராதியில் இடம்பெற வாய்ப்புண்டு. கூகுல், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற வார்த்தைகளும் இந்த வகையில் தான் ஆங்கில பேரகராதியில் இடம்பெற்றன.
அது போல் ‘வூவூஜெலா’ (வண்ணநிற பிளாஸ்டிக் கொம்புகள்) என்ற தென்னாபிரிக்காவில் நடந்த உலகக் கிண்ணத்தில் பிரபலமான வார்த்தையும், சமீபத்தில் வொஷிங்டனில் ஏற்பட்ட குளிர்காலப் புயலை குறிப்பிடுவதற்காக ஒபாமா கூறிய ‘ஸ்னோவ்மெகட்டான்( வார்த்தையும் உலக மொழி கண்காணிப்பகத்தால் அங்கீகரிக் கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக