சனி, 24 மார்ச், 2012

நிர்க்கதியான நிலையில் மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்பும் இலங்கைப் பணிப்பெண்கள்

வேலையிழந்து நிர்க்கதியான நிலையில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாடு திரும்பியவண்ணம் உள்ளனர். அதேவேளை வேலைவாய்ப்புத் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் தொகை குறைந்தபாடில்லை. இவ்வாறான போக்குகளுக்கு மத்தியில் தமது எதிர் காலம் குறித்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் மேலும் ஒரு பகுதியினர் காணப்படுகின்றனர்.



இதேவேளை சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் தொழிலின்றி நிர்க்கதியாக இருந்த இலங்கைப் பணிப்பெண்கள் 98 பேரை இவ்வாரம் இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்சியூலர் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

தாம் பணியாற்றிய வீடுகளைவிட்டு வெளியேறிய பணிப் பெண்களில் 42 பேருக்கு கொழும்புக்கான விமானப்பயணச் சீட்டை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கியுள்ளதாகவும், ஏனையோர் தமக்கான கட்டணங்களை தாங்களே வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பணிப்பெண்களாக சவூதி அரேபியாவிற்கு சென்ற பணிப்பெண்கள் பலர் தாம் பணியாற்றிய வீடுகளிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் அங்கிருந்து வெளியேறியதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என மேற்படி கொன்சியூலர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
வேலைவழங்குனர்களால் மேற்கொள்ளப்படும் அநாவசிய தொந்தரவுகள், சம்பளம் வழங்கப்படாமை அடிமைகளைப் போன்று நடத்தப்படுவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக் களை முன்வைத்த இவர்கள் அவ்வீடுகளிலிருந்து வெளியேறியதாக தெரியவருகிறது.

சவூதியில் பணியாற்றிய பணிப்பெண்களுக்கு சம்பளமாக சராசரியாக 650 சவூதி ரியால்கள் வழங்கப்படுவதாகவும் அதேவேளை வீடுகளை விட்டு வெளியேறும் பெண்களை சவூதி அரேபி யர்கள் 1500 ரியால்கள் வரையிலான சம்பளத்திற்கு வேறு இடங்களில் பணிக்கு அமர்த்துவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் நாளொன்றுக்கு 10 பேர் என்ற அடிப்படையில் இலங்கைப் பணிப்பெண்கள் தாங்கள் வேலைக்கு அமர்த்தப்பட்ட வீடுகளிலிருந்து வெளி யேறுவதாகவும் மற்றுமொர்ரு தகவல் கூறுகின்றது.

இலங்கையில் வேலைவாய்ப்பின்மை, வறுமை, குடும்பத்தின் எதிர்காலம், கடன் சுமை என்பவற்றை கருத்தில் கொண்டே பெரும் எண்ணிக்கையான இளம் யுவதிகள் உட்பட பலரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றனர். இதன் பொருட்டு அவர்கள் கடன்பட்டும் தமது உடைமைகளை விற்றும் பெற்ற பணத்தையே தங்களை அனுப்பிவைக்கும் முகவர் நிலை யங்களுக்கு செலுத்துவதுடன் விமான டிக்கட்டுக்களையும் கொள்வனவு செய்கின்றனர்.
மிகுந்த கஷ்டங்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியில் அமைந்த அவர்களின் மத்திய கிழக்கு பயணம் சிறந்த வேலை வழங்குநர்களிலேயே தங்கியுள்ளது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குறித்த வேலை வழங்குநர்கள் உறுதியளித்தவாறு சம்பளம் வழங்க தவறிவிடுவதுடன் பணியாளர்களை அடிமகளைப் போன்று நடத்துவதும் தண்டனைகள் விதிப்பதும் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதும் தொடர்ந்தும் பணியாளர்கள்வேலை செய்ய முடி யாத இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடு கின்றது.

அதிலும் விசேடமாக சவூதி அரேபியா வுக்குசெல்லும் பணிப்பெண்கள் பலர் மிகுந்த சித்திரவதைக்கு உள்ளாகி சோக கதைகளை தாங்கியவாறு இலங்கை திரும்பியுள்ளனர். அதிலும் பலர் மனோரீதியாக பாதிக்கப்பட்டு மனநோயாளர்களாகவும் மாறிவிடுகின்றனர். உள்நாட்டில் வேலை வழங்குநர்களுக்கு எதிராக இது தொடர்பில் போதிய சட்டதிட்டங்கள் இன்மை அவர்களின் மனிதநேயமற்ற செயெல்க ளுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அந்த வகையில் இலங்கைப் பணிப்பெண்கள் பலர் சவூதி அரேபியாவில் மிகுந்த கசப்பான அனுபவங் களுக்கு ஆளாகியுள்ளதுடன் நிர்க்கதியான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் இந்தப்பிரச்சினைக்கு இதுவரை காத்திரமான தீர்வு எதுவும் கிட்டியதாக தெரிய வில்லை. இதேவேளை, சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை உரிய முறையில் நிறைவேற்றாது போனால் ஜோர்தான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்பப் போவதில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன் புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜோர்தானில் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு பிரச்சினைகள் இல்லையென தெரிவித்த அவர், பணிப் பெண்ணாக செல்வோரே பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றனர் என்று கூறியுள்ளார். அத்துடன் பணிப் பெண்களுக்கான சம்பளம், மருத்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால் அங்கு பணிப் பெண்களை அனுப்பும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படும் என்றும் அமைச்ர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் அண்மையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்ர் இதனை தெரிவித்ததுடன் குறித்த சில நாடுகளில் தொழிலாளர் சட்டம் முறையாக அமுல்நடத்தப்படுவ தில்லை. அதன் காரணமாகவே பணியாளர்கள் மிகுந்த நெருக்க டிக்கு முகம் கொடுக்கின்றனர். அவ்வாறான நாடுகளுக்கு பணி யாளர்களை அனுப்புவதற்கு தடை விதிப்போம் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமையினால் அங்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்ல சட்டவிரோதமாக முயற்சிகளை மேற் கொள்ளவேண்டியதில்லை. ஒப்பந்தத்தின் பிரகாரம் முதலாவது குழு இவ்வருடத்துக்குள் அனுப்பிவக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர் தொடர்பில் விளக் கங்களை அளிக்கும் முகமாக வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் தூதுவராலயங்களில் பணிபுரியும் நலன்புரி அதிகாரிகளுக்கு எதிர்வரும் மே 13 தல் 15 வரை விசேட செயலமர்வு நடத்தப் படவிருப்பதாகவும் அமைச்சர் தெவித்துள்ளார்.

இந்நடவடிக்கை மிகவும் அத்தியாவசியமாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வழங்குநர் களினால் பணிப்பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக வும் இது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்தாலும் உரிய பலன் கிட்டுவதில்லை என்றும் மக்கள் மிகுந்த விசனம் தெரிவிக் கின்றனர். எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக பயணிப்போரின் சம நலன் களை கவனிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதனை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல