இலங்கை::தமிழக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்துள்ளார் என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.
கருணாநிதி உள்ளிட்ட பல தமிழக அரசியல்வாதிகள் அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலைமையை அடைந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி போன்றோருக்கு மெய்யான தமிழ் மக்களின் ஆதரவு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈழக் கோரிக்கையை பிரச்சாரம் செய்து சில தமிழ் மக்களை தூண்டி அதன் மூலம் அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்ள இவர்கள் முயற்சிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி போன்ற தமிழகத் தலைவர்கள் இதய சுத்தியுடன் தமிழர் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்பதனை பல தமிழர்கள் அறிவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தமிழ்; தலைவர்களின் பிழையான வழிகாட்டல்களினால் பெருமளவிலான உயிர்கள் காவுக கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகார மோகம் காரணமாக கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள் மக்களை திசை திருப்புகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலமாக நீடித்து வந்த பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வு வழங்குவது பொருத்தமாக அமையாது என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் காத்திரமான முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக