இலங்கை::இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை பேரவையில், யோசனை ஒன்றை கொண்டு வரும் சூழ்ச்சியில், தேசத்துரோகியாக, வெளிநாட்டுசக்திகளுக்கு உதவிய இலங்கை வெளிவிவகார அமைச்சின் பெண் அதிகாரி ஒருவர் தொடர்பாக தகவல்கள் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த யோசனை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும் சந்தர்ப்பத்தில், அதில் கலந்துக்கொள்வதற்காக இலங்கை பிரதிநிதிகளுடன் ஜெனிவா சென்ற, இந்த பெண் அதிகாரி, அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், இலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களின் முக்கிய செயற்பாட்டாளர்களுடன் சுமார் 4 மணிநேரம் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
இந்த அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களே, இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில், புலம்பெயர் தமிழர்களுடன் அணைந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, குறித்த பெண் அதிகாரி, அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான சீ.ஐ.ஏவுக்கு பணியாற்றி வருகின்றாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் யோசனை தொடர்பாக வேலைத்திட்டங்களின் போது, இலங்கை பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றி, அந்த அதிகாரி, மிகவும் சூட்சுமான முறையில், எதிர்தரப்புக்கு தகவல்களை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
ஒரு காலத்தில், இலங்கையின் தூதுவராக சில ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றிய இந்த அதிகாரி, புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை பேணி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது எனவும் திவயின கூறியுள்ளது.
அதேவேளை ஜெனிவாவில் அமெரிக்காவின் யோசனை நிறைவேற்றப்பட்ட தினமான 22 ஆம் திகதி இரவு அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் இணைந்து, ஆடம்பர விடுதி ஒன்றில் விருந்துபசாரம் ஒன்றை நடத்தியுள்ளனர் என திவயின தெரிவித்துள்ளது. இதனை ஏற்பாடு செய்திருந்த சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் அதில் கலந்துக்கொண்டவர்களுக்கு நன்றியை தெரிவித்து, பணி செய்தாகிவிட்டது (job done) என கூறியதாகவும் திவயின குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை அரசசார்பற்ற நிறுவனங்களில் செயற்பாட்டாளர்கள் பலர் ஜெனிவாவில் மிகவும் அழகான மோஸ்திரி பிரதேசத்திற்கு நேற்று பயணம் செய்துள்ளதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக