ஐ.நா -சபைக்கு என்று தனி கட்டிடம் கட்டும் தீர்மானம் 1946 -லில் லண்டனில் நடந்த பொதுகூட்டத்தில் முடிவானது! ஐ.நா -சபை கட்டுவதற்கு அமெரிகாவின்
பிலடெல்பியா, பாஸ்டன், சான்பிரான்சிஸ்கோ போன்ற நகரங்கள் பரிசீலிக்கப்பட்டது! இறுதியில் நியுயார்க்கில் கட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது! நியுயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் தீவில் அமெரிக்காவின் பெரிய கோடீஸ்வரரான ஜனதாக் பெல்லர் என்பவரின் பிரமாண்டமான
பங்களாவை அவர் 65 லட்சம் டாலருக்கு கொடுபதாக கூறவே, அந்த இடத்தை ஐ.நா.வாங்கியது!
ரஷியா,கனடா,பெல்ஜியம்,பிரான்ஸ்,சீனா,சுவீடன்,பிரேசில்,இங்கிலாந்து,ஆஸ்திரேலியா,உருகுவே,
போன்ற நாட்டின் பிரபல கட்டிட வல்லுனர்கள் கோடா ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டு, 650 லட்சம் டாலரில் கட்டுவதற்கு திட்டம் தயாரானது! அமேரிக்கா இந்த பணத்தை வட்டி இல்லாத கடனாக ஐ.நா -சபைக்கு கொடுத்தது! பதினெட்டு ஏக்கர் அமைந்துள்ள,உயரமான கட்டிடமான ஐ.நா -சபை 24 . 10 .1949 -கட்டி முடிகப்பட்டு திறக்கப் பட்டது! அமெரிக்காவின் கடனை 1962 யில் ஐ.நா செலுத்தி விட்டது!
அமெரிக்க நாட்டில் இருந்தாலும் ஐ.நா -சபைக்கு அமெரிக்கா சொந்தம் கொண்டாட முடியாது என்று சொல்லப்படுகிறது!! இந்த இடம் சர்வதேச எல்லையாக கருதப்படுவதாகவும் சொல்லுகிறார்கள்!
அமெரிக்காவில் கைது நடவடிக்கைகளில் தப்பிக்க யாரும் ஐ.நா -சபையில் தஞ்சம் அடைய முடியாது! அத்துமீறி ஐ.நா சபைகுள் நுழைந்தால், அவர்களைப் பிடித்து அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஐ.நா சபைக்கும், அமெரிக்காவுக்கும் ஒப்பந்தம் உள்ளது!
ஐ.நா -சபை நூலகத்தில் நான்கு லட்சம் புத்தகங்கள் உள்ளன. ஐ.நா சபைக்கு என்று தனியாக தீயணைப்பு நிலையம்,தனி பாதுகாப்பு படையினர், அஞ்சல் நிலையம் ஆகியவைகள் உள்ளன!
இரு ஆலிவ் இலைகளுக்கு இடையே உலக வரைபடம் வரிந்து இருப்பது ஐ.நா சபையின் சின்னமாகும்! ஐ.நா -சபை தலைமை செயலகத்தின் மீது எப்போதும் இது பறந்து கொண்டிருக்கும்!
இந்த கட்டிடம் முப்பத்தொன்பது மாடிகளைக் கொண்டுள்ளது!
ஐ.நா -சபையின் வீட்டோ அதிகாரம் - சில தகவல்கள்:
ஐ.நா -சபையில் உள்ள வலுவான அமைப்பு எனபது அதன் பாதுகாப்பு சபையாகும்! இந்த சபையில் அமேரிக்கா,இங்கிலாந்து,பிரான்ஸ்,சீனா,ரஷியா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளும்,பத்து தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன. நிரந்தர உறுப்பு நாடுகளான ஐந்து நாடுகளுக்கும் வழங்கப் பட்டுள்ள சிறப்பு அதிகாரம் என்பதே வீட்டோ அதிகாரம் எனபது!
ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் (United Nations Security Council veto power) எனப்படுவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும். இரண்டாம் உலகப்போரின் வெற்றிக்கு இந்த 5 நாடுகளின் பங்கு வெளியுலகுக்கு தெரிய வந்ததால் ஐநா அமைக்கப்பட்ட 1946 ஆம் ஆண்டு முதல் வீட்டோ (தடுத்து நிறுத்தும்) அதிகாரம் பெற்ற நாடுகள் என்ற சிறப்பை இந்நாடுகள் பெறுகின்றன. இந்த அதிகாரத்தை ஐ நா பாதுகாப்பு சபையின் பச்சை அறிக்கை (The green papers of U N Security Council) தெளிவுபட அறிவித்துள்ளது.
இதன் படி பாதுகாப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (இதர உறுப்பு நாடுகள்) ஆதரவு பெற்றிருந்தாலும் இந்த 5 நாடுகளின் ஏவரேனும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்த தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ நா சட்ட பிரிவு 27 ல் வரையறுத்துள்ளது.
ஆகவே இந்த நாடுகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஐ.நா சபையில் கொண்டுவரும் எந்த ஒரு தீர்மானத்தையும் ரத்து செய்துவிட முடியும்!
ஐ.நா.பாதுகாப்பு சபையில் மாற்றத்தை செய்து, மேலும் ஆறு நாடுகளை நிரந்தர
உறுப்பு நாடுகளாக அதிகரிக்கவும் தற்போது இருக்கும் தற்காலிக உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து இருபத்தி நான்காக ஆக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது! புதிதாக ஐ.நா.பாதுகாப்பு சபையில் சேர்க்கப்படும் நிரந்தர உரப்பு நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் வழங்க இயலாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது . பாதுகாப்பு சபையில் இடம் பிடிக்கப் பல்வேறு முயற்சிகளைச் செய்துவரும் இந்தியா,ஜப்பான்,ஜெர்மனி,பிரேசில் போன்ற நாடுகளுக்கு இது அதிர்ச்சியை அளித்துள்ளது!
ரத்து அதிகாரம் இன்றி, பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு இடம் தந்தால், அதனை இந்தியா ஏற்றுகொள்ளாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்! இந்தியாவின் முடிவையே பிற நாடுகளும் எடுக்கும் நிலை இருந்து வருகிறது!
ரத்து அதிகாரம் இன்றி பாதுகாப்பு சபையில் இந்தியா இடம் பிடிப்பதால் இந்தியாவின் மதிப்பு ஒன்றும் அதிகரித்து விடாது! தற்போது வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகள், தங்களுக்கு இருக்கும் அதிகாரம் மற்ற நாடுகளுக்கும் கிடைக்கக் கூடாது என்ற முனைப்பில் இருந்து வருகின்றன.
வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் பெறாத நாடுகள் :
1) வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்: அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம்.வீட்டோ அதிகாரம் இல்லாதமற்ற நாடுகள்: அணு ஆயுதங்களை வைத்து கொள்ள கூடாது.
2) வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்: புதிய அணு ஆயுதச் சோதனை செய்யலாம்.வீட்டோ அதிகாரம் இல்லாத மற்ற நாடுகள்: ஆயுதச் சோதனை செய்யக் கூடாது.
3) வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்: தீர்மானங்கள் கொண்டு வரலாம், பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டலாம், உறுப்பு நாடுகளில் ஏதேனும் பிரச்சினை என்றால் அது குறித்து விசாரணை நடத்தலாம். வீட்டோ அதிகாரம் இல்லாத மற்ற நாடுகள்: தீர்மானத்தில் பரிந்துரைக்க மட்டுமே முடியும், பாதுகாப்புப் பேரவையில் கலந்து கொள்ளலாம் (பேரவை அனுமதித்தால்) உறுப்பு நாடுகளுக்கு பிரச்சனை என்றால் விசாரணை நடத்தும் உரிமை இல்லை.பிரச்சினைகளுக்கான தீர்வைப் பரிந்துரைக்கலாம். கருத்துச் சொல்லலாம்.
4) வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்: 'தவிர்க்க முடியாத சூழல்' அல்லது 'பேரழிவு ஆயுதம்' போன்ற ஏதாவது பொய்க் காரணம் கூறி நேரடியாகப் போர் நடவடிக்கையில் ஈடுபடலாம். எடுக்கலாம் (வியட்நாம், வடகொரியா, இராக் போர்கள்).வீட்டோ அதிகாரம் இல்லாத மற்ற நாடுகள்:நேரடியாகப் போர் செய்ய முடியாது.
தற்காலிக உறுப்பினர்கள் உட்பட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து, ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும் ஒரேயொரு 'நிரந்தர உறுப்பு' நாடு 'வீட்டோ' என்று சொல்லி விட்டால் எவரும் எதுவும் செய்ய முடியாது.
'வீட்டோ' என்பதை அமெரிக்கா தனது செல்லக் குழந்தையான இஸ்ரேலுக்கு விளையாடக் கொடுக்கும் விளையாட்டுப் பொருளாகும்.1973 ஆண்டிலிருந்து இன்று வரை அமெரிக்கா அரசு கிட்டத்தட்ட 51 முறை வீட்டோ அதிகாரத்தை ஐநா சபையில் பயன்படுத்தயுள்ளது. இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில் சுமார் 39 முறை இஸ்ரேலை பாதுகாக்க மட்டும் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் என்னதான் பலஸ்தீன மக்களை கொன்று குவித்தாலும் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக நடவாடிக்கை எடுக்க கோரி ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வந்து அதில் அனைத்து நாடுகளும் ஆதரவாக வாக்களித்தாலும் அமெரிக்கா, தனது சிறப்பு அதிகாரமான வீட்டோ(ரத்து) அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கையை தடுத்து இஸ்ரேலை காப்பாற்றி வருகிறது!
2006 ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனின் காசா விற்கு எதிராக கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் ஆயிரக்கக்கான அப்பாவி மக்கள் இறந்தனர்.இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்த கோரி 2006 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி ஐநா சபையில் தீர்மானம் வந்தது இதையும் தனது அதிகாரத்தின் மூலம் அமெரிக்கா நிறுத்தியது.
பிரிட்டனின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடி சுதந்திரம் கண்ட நாடு அமெரிக்கா. பிரிட்டன் அரசால் தீவிரவாதி என்று அழைக்கப்பட்ட ஜோர்ஜ் வாசிங்க்டன் சுதந்திர அமெரிக்காவின் முதல் குடியரசு தலைவரானார். ஆனால் இன்று சுதந்திரத்திற்காக போராடும் மற்ற நாடுகளின் போராளிகளை தன்னால் ஆனா மட்டும் ஒடுக்குகிறது அமெரிக்கா. உலகம் முழுவது ஜனநாயகம் வேண்டும் என்று அமெரிக்கா உதட்டளவில் கூறி வந்தாலும் தன்னால் ஆனா மட்டும் உலகிற்கு சர்வதிகாரத்தை தருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
கியூபாவின் மீது நசுக்கல் தொடங்கி ஜப்பான் மீது அணு ஆயுத தாக்குதல் வியட்நாம், கொரியா, ஈராக், சூடான், ஆப்கானிஸ்தான், லிபியா, ஏமன், பாகிஸ்தான், இன்னும் லத்தின் அமெரிக்க நாடுகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இது உலக சமாதானத்தை நிலைநாட்டும் ஐ.நா.வின் நோக்கத்திற்கு எதிரானது மட்டுமல்ல, பாரபட்சமான செயலாகவும் பார்க்கப்பட்டு வருகிறது!
இதுவரை இந்த வீட்டோ என்ற அதிகாரத்தை பயன்படுத்தி எந்த ஒரு நன்மையான காரியங்களும் செய்யப்படவில்லை. இதை தங்கள் சர்வாதிகார மேலாண்மையை வெளிபடுத்தவே இதுவரை இந்த நாடுகள் பயன்படுத்தி வந்தன என்பதே உண்மை. வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன், போன்ற நாடுகள் மீது போர் நிகழ்த்தபட்ட போது வீட்டோ பவர் உள்ள மற்ற நாடுகள் பொம்மைகளாக மவுனம் சாதித்தன என்பதும் கவனிக்க படவேண்டியது.
வீட்டோ (ரத்து) அதிகாரத்தை நீக்கிவிட்டு, எல்லா நாடுகளையும் சமமாக பாவிக்கும் நெறியை ஐ.நா. ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் ஆலோசனை தெரிவித்துள்ளார்! அப்துல் கலாம் ஆலோசனை ஏற்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தால் உலக சமாதானத்துக்கு இதுவரை ஐ.நா. ஆற்றியுள்ள பணிகளை விட இன்னும் சிறப்பான பணிகளை செய்ய முடியும்! உலக அமைதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஐ.நா.சபை தீர்மானித்து, முடிவெடுத்தால், வீட்டு (ரத்து) உரிமை எந்த நாட்டுக்கும் தேவையில்லை என்ற முடிவுக்கு எல்லா நாடுகளும் ஆதரித்து வரவேற்கும்! அப்படி எல்லா நாடுகளும் வீட்டோ அதிகாரத்தை நீக்குவதற்கு முன்வரவில்லை, முயற்சிகள் எடுக்கவில்லை என்ற நிலை உள்ளவரை உலக அமைதி என்பதும், உலக அமைதிக்காக பாடுபடுவதாக கூறும் ஐ.நா.வின் பணிகளும் பாரபட்சமானதாக பலநாடுகளுக்கும் தோன்றுவதை தவிர்க்க முடியாது!

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக