இந்தக் கேள்விக்கு இதுவரை துல்லியமான விடை கிடைத்தபாடில்லை. இருந்தாலும், பல விஞ்ஞானிகளும் தோராயமாக பூமி தோற்றம் குறித்த கருத்துகளை பல கால கட்டங்களில் தெரிவித்திருக்கிறார்கள். புதிதாக இப்போது கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பூமியின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து ஒரு முடிவை வெளியிட்டிடிருக்கிறார்கள். பூமி தோன்றி 500 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பது தான் இவர்கள் வெளியிட்டிருக்கும் புதிய முடிவு. அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கொண்டு இதை யூகித்திருக்கிறார்கள் இவர்கள்.
அந்த ஆய்வு முடிவின் சிறப்பம்சங்கள் சில...
“பூமி தோன்றிய உடனே அதில் உயிரினங்கள் தோன்றி விடவில்லை. பூமி தோன்றி பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகே உயிரினங்கள் தோன்றியிருக்க முடியும். எடுத்த உடனேயே இப்போது உள்ளது போலவே உயிரினங்கள் தோன்றவில்லை. சுமார் 100 ஆண்டுகள் கழித்து முதன் முதலாக கடல் நீரில் பாசி போன்றவை தோன்றின. அக்காலத்தில் காபன் கூட்டுப் பொருட்கள் அதிகமாக இருந்ததால், பாசி தோன்றியிருக்கக் கூடும்.
இதன் பிறகு 50 கோடி ஆண்டுகள் கடந்த பிறகு தான் உயிரினங்கள் தோற்றம் பெறத் தொடங்கின. அதுவும் கூட பலவித மாறுதல்களை அடைந்தன. கிளிஞ்சல்கள் போன்ற திடமான கூடுகளில் உயிரினங்கள் வசிக்க ஆரம்பித்தன. இதற்கு பிறகு 50 கோடி ஆண்டுகள் கழித்து படிப்படியாக சில உயிரினங்கள் தோன்றி வளர ஆரம்பித்தன.
இப்படிப் போகிறது கலிபோர்னியா விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு. முழுமையான விவரங்கள் தெரிய இன்னும் சில ஆய்வுகள் செய்ய வேண்டியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக