நபரொருவரின் காதை கடித்து துண்டாக்கிய பெண் வங்கி முகாமையாளர் ஒருவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
சமந்தா வில்லியம்ஸ் (28 வயது) என்ற மேற்படி வங்கி முகாமையாளர், காரி பெட்லர் (39 வயது) என்பவரை ஹோட்டல் ஒன்றின் வெளியில் வைத்து தாக்கி அவரது இடது காதின் ஒரு பகுதியை கடித்து துண்டாக்கியுள்ளார்.
காரி பெட்லர் ஹோட்டலுக்கு வெளியே தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்திக்கொண்டிருந்த வேளையிலேயே சமந்தாவால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு முன் சமந்தாவின் நண்பர் ஒருவர் காரி பெட்லருடனும் அவரது நண்பர்க ளுடனும் உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், சமந்தா எதற்காக காரி பெட்லரை தாக்கினார் என்ற விபரம் வெளியி டப்படவில்லை.
காது துண்டாக்கப்பட்ட காரி பெட்லர், உடனடியாக வில்ட்ஸ் நகரில் செலிஸ்பரி எனும் இடத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது கடித்துத் துண்டாக்கப்பட்ட காதின் பகுதியை மீளவும் இணைக்க மருத்துவர்களால் முடியாது போனதாக தெரிவிக்கப்படுகிறது.
இந் நிலையில், மேற்படி வழக்கை விசாரித்த போர்னிமவுத் கிறவுண் நீதிமன்ற நீதிபதி, சமந்தா வில்லியம்ஸுக்கு 15 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக