“பேஸ்புக்' இணையத்தளத்தைப் பயன்படுத்தி தனது காதலியை அச்சுறுத்தி, இணையத்தள “வீடியோ' கருவி மூலம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவரை மிரட்டிய நபரொருவருக்கு 7 வருட சிறைத்தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றமொன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
டாரெல் பிங்ஹாம் (49 வயது) என்ற மேற்படி நபர், தன்னை அமெரிக்க உதை பந்தாட்டவீரர் ஒருவர் என போலியாக தனது “பேஸ் புக்' இணையத்தளம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவரை உதைப்பந்தாட்டவீரர் என நம்பிய குறிப்பிட்ட யுவதி (21 வயது) அவருடன் இணையத்தளத்தில் தொடர்பை ஏற்படுத்தி அரட்டையில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து சில நாட்கள் இந்த “பேஸ் புக்' இணையத்தள தொடர்பாடல் தொடர்ந்ததையடுத்து டாரெல் பிங்ஹாம் விரித்த காதல் வலையில் யுவதி விழுந்தார்.
இந்நிலையில், குறிப்பிட்ட யுவதியை அவரது மேலாடையற்ற அரை நிர்வாணப் புகைப்படமொன்றை அனுப்பி வைக்கு மாறு டாரெல் பிங்ஹாம் நிர்ப்பந்தித்துள்ளார்.
அவரது தொந்தரவைத் தாங்கமுடியாத யுவதி எதிர்காலத்தில் கணவராகப் போகிறவர் என்ற நம்பிக்கையில் தனது மேலாடையற்ற புகைப்படமொன்றை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பின் டாரெல் பிங்ஹாம், தன்னை தனது நண்பனான கிரான்ட் என பொய்யாக இனங்காட்டி “பேஸ்புக்' இணையத் தளம் மூலம் யுவதியை தொடர்பு கொண்டுள்ளார்.
யுவதி தனது காதலருக்கு அனுப்பி வைத்த அரை நிர்வாணப் புகைப்படம் தனது கைக்கு கிட்டியுள்ளதாகவும் யுவதி இணையத்தள “வீடியோ' கருவி முன் ஆபாசமான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால் அந்தப் புகைப்படத்தை அவரது நண்பர்களுக்கு அனுப்பிவைத்து விடப் போவதாகவும் கிரான்ட் என போலியாக இனங்காட்டிக் கொண்ட டாரெல் பிங்ஹாம் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், யுவதி இரவும் பகலும் இணையத்தள “வீடியோ' கருவியின் முன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
இறுதியில் இந்த விவகாரம் தொடர்பில் டாரெல் பிங்ஹாமிடம் அந்த யுவதி தெரிவித்துள்ளர்.
சில நாட்களின் பின் டாரெல் பிங்ஹாம் யுவதியுடன் தொடர்புகொண்டு கிரான்
ட்டை தேடிக் கண்டுபிடித்து கொன்றுவிட்டதாகத் தெரிவித்து கட்டப்பட்ட நிலையில் இருக்கும் நபரொருவரின் புகைப்படத்தை யுவதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
யுவதி அதை உண்மை என நம்பினார். டாரெல் பிங்ஹாமின் மீதுள்ள காதலால் அவரைப் பாதுகாக்க அந்தப் படுகொலையை மறைக்க அவர் தீர்மானித்தார்.
சில வாரங்கள் கழித்து கிரான்ட்டின் நண்பர் என தெரிவித்து சாட் என்ற பெயரில் டாரெல் பிங்ஹாம் யுவதியுடன் தொடர்பை ஏற்படுத்தி, அவரது நிர்வாணப் புகைப்படத்தை வெளியிடப்போவதாக மீளவும் அச்சுறுத்தி அவரை இணையத்தள புகைப்படக் கருவியின் முன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார். பொறுமை இழந்த யுவதி தன்னுடன் பணியாற்றிய நண்பர்களிடம் இது தொடர்பில் தெரிவிக்கவும் பொலிஸாருக்குத் தகவல் பறந்தது.
விசாரணைகளையடுத்து, பிரித்தானியாவில் மேற்கு யோக்க்ஷியரில் வசிக்கும் முன்னாள் படைவீரரான டாரெல் பிங்ஹாமே குறிப்பிட்ட யுவதியை கிரான்ட் மற்றும் சாட் என்ற பெயர்களில் அச்சுறுத்தி பாலியல் நடவடிக்கையில் ஈடுபடு வதற்கு நிர்ப்பந்தித்தமை கண்டறியப்பட் டுள்ளது.
தன்னை 6 மாத காலத்துக்கு மேலாக அச்சுறுத்தி வந்த நபர், தான் உயிருக்குயிராக நேசித்த காதலரே என்பதை அறிந்த போது தனது இதயமே சுக்குநூறாக உடைந்தது போன்றிருந்ததாக மேற்படி யுவதி தெரிவித்துள்ளார்.
“நான் என்னை ஒப்படைக்கத் தயாராக இருந்தது அவர் ஒருவரிடமே. ஆனால் அவர் என்னை 6 மாத காலமாக வேறு பெயர்களில் சித்திரவதை செய்துவந்ததை என்னால் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளது. எனக்கு தற்போது எவரையுமே நம்படியாதுள்ளது. நான் மிகவும் அச்சம டைந்துள்ளேன்'' என யுவதி கூறினார்.
சட்டக் காரணங்களுக்காக யுவதியின் பெயர் வெளியிடப்படவில்லை.
இந்த வழக்கை விசாரித்த ஹல் நீதிமன்ற நீதிபதி, டாரெல் பிங்ஹாக்கு 7 வருட சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக