ஒளியை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாதென்பது ஐன்ஸ்டினின் வாதமாகும்.
இதுவே 'Theory of Relativity' கோட்பாடு எனப்படுகின்றது.
ஒளிக்கு திணிவில்லையென்பதனால் அதனை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாது என ஐன்ஸ்டின் பல தசாப்தங்களுக்கு முன்னர் விளக்கியிருந்தார்.
வெற்றிடமொன்றில் ஒளியானது (light) ஒரு செக்கனில் 1,86,282 மைல்கள் பயணிக்கும். அதாவது 2,99,792 கிலோ மீற்றர்.
எனினும் இக்கோட்பாடு பிழையென விஞ்ஞானிகள் சிலர் கடந்த வருடம் தெரிவித்திருந்தனர்.
ஒளியை விட நியூட்ரினோ எனப்படும் அணுவியல் துகள்களால் வேகமாகப் பயணிக்கமுடியுமெனவும், இதனை தாம் பல கட்ட ஆய்வுகளின் மூலம் உறுதிசெய்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அவர்கள் செலுத்திய அணுவியல் துகள்கள் ஒளியின் வேகத்தினை விட 60 நெனோசெக்கன்கள் (60.7 billionths of a second) வேகமாகப் பயணித்ததாக அவ்விஞ்ஞானிகள் அடித்துக் கூறியிருந்ததுடன் அதனை நிரூபிக்கவும் தயார் எனத் தெரிவித்திருந்தனர்.
சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைக்கூடத்திலேயே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் ஆராய்ச்சியானது பௌதிகவியலின் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் ஐன்ஸ்டினின் கோட்பாட்டையே அசைத்துப் பார்த்தது.
எனினும் இதனைப் பல விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து இவ் ஆராய்ச்சி முடிவின் உறுதித்தன்மை தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் இதே ஆராய்ச்சியை நோபல் பரிசுபெற்ற இத்தாலிய பௌதிகவியலாளரான கார்லோ ருபியா மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டனர்.
இதன்படி நியூட்ரினோ எனப்படும் அணுவியல் துகள்களால் ஒளியை விட வேகமாகப் பயணிக்கமுடியவில்லை என இவர்களது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர்.
மேற்படி ஆய்வும் முன்னைய ஆய்வினைப் போலவே சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைக்கூடத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை ஒளியை விட வேகமாக அணுவியல் துகள்களால் பயணிக்கமுடியும் என ஆய்வறிக்கை வெளியிட்ட விஞ்ஞானிகள் குழுவும் தமது பரிசோதனை முடிவில் சில தொழில்நுட்ப குளறுபடிகள் காணப்பட்டதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வின் முடிவும் அணுவியல் துணிக்கைகளால் ஒளியை விட வேகமாகப் பயணிக்க முடியவில்லை என்ற முடிவையே சுட்டிக் காட்டுகின்றன.
எனவே ஆய்வில் தவறு விட்டது தற்கால விஞ்ஞானிகளே என எண்ணத் தோன்றுகின்றது.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக