வேலைக்கு செல்வதை தவிர்ப்பதற்கு நபரொருவர் தனது இடது காலை வாளால் துண்டித்து, அதனை இறைச்சி வாட்டும் உபகரணமொன்றில் வீசிய சம்பவம் ஆஸ்திரியாவில் இடம்பெற்றுள்ளது.#
தென் ஆஸ்திரியாவில் மிட்டர்லாபில் நகரைச் சேர்ந்த 56 வயது நபரே இவ்வாறு தனது காலை தானே துண்டித்துக் கொண்டுள்ளார்.இது தொடர்பான செய்தியை ஆஸ்திரிய ஒலிபரப்பு சேவையான “ஒ.ஆர். எப்' வெளியிட்டுள்ளது.
மேற்படி நபர் வேலை செய்வதற்கு தகுதியானவரா இல்லையா என்பதை தொழில் திணைக்கள அதிகாரிகள் பரிசோதிக்க வருவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னரே அவர் காலை துண்டித்துக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து இரத்தம் பெருக்கெடுத்தோட காணப்பட்ட அந்த நபர், கிராஸ் நகரிலுள்ள மருத்துவமனைக்கு உலங்குவானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
அவரது துண்டிக்கப்பட்ட கால் மோசமாக எரிந்துள்ளதால் அதனை மீளவும் அவரது உடலில் இணைக்க முடியாது போனதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக