சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்தினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை சந்தித்துள்ளார்.
இதன்போதே, பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது. அத்துடன் ரிசானா நபீக்கின் சகோதரரிற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருகோணமலை மாவட்ட அலுவகத்திலும் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோரும் கலந்துகொண்டனர். (படம் : சுதத் சில்வா)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக