வியாழன், 18 ஏப்ரல், 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் – பகுதி 34

அன்ரன் பாலசிங்கம் சம்பந்தனிடம் நக்கலாகக் கேட்ட பெண் வேறுயாருமல்ல இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கதான் அவர். உங்கட ஆள் என்ன செய்கிறா இப்ப? என்று சம்பந்தனிடம் பாலசிங்கம் நக்கலாகக் கேட்டது சந்திரிகாவையே. அரசியல் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் உரையாடுகின்ற விடுதலைப் புலிகளின் உயர்மட்ட அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி அல்லது மத்தியகுழு உறுப்பினர்களாக இருந்தாலும் சரி மிகுந்த அவதானத்துடனேயே தங்களது உரையாடல்களை மேற்கொள்வார்கள். பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனோ அல்லது வெளிநாட்டு பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் போன்றோருடன் உரையாடுகின்ற பொழுது தங்களது கருத்தாடல்களில் ஏதாவது பிழைகள் இருந்துவிட்டால் பிறகு அதனால் ஏற்படும் விளைவுகள் பாதிப்புகள் என்பனவற்றிற்கான முழுப் பழியையும் தங்கள் மீதே போட்டுவிடுவார்கள் என்ற அச்சம் அவர்களிடையே இருந்தது. தண்டனை எப்படியிருக்கும் என்பதும் அவர்கள் அறிந்ததே. ஆனால், அன்ரன் பாலசிங்கத்தைப் பொறுத்தவரையில், எவருடனும் நக்கல் நையாண்டியுடனேயே தனது இராஜ தந்திர உரையாடல்களையும் நடத்துவார். ஆட்களுக்குத் தக்கபடி கொச்சைத்தன்மையின் அளவும் கூடிக் குறையும்.

இவ்வாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்பில் பிரபாகரன் தொடக்கம் பொட்டம்மானில் இருந்து பலருக்கும் கடுமையான ஆட்சேபனைகள் இருந்தபோதிலும் அதனை வெளிப்படையாகக் கூறாமல் சிரித்தவாறு உறவாடிக் கொண்டு, வெகு கவனமாக அவர்கள் தொடர்பில் தங்களது புலனாய்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தார்கள். ஆனால் அன்ரன் பாலசிங்கம் இந்தக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதில்லை. தனது மனதில் பட்டதை நையாண்டியும் கொச்சையுமாகக் கூறிவிடுவார்.
சம்பந்தன் மீது புலிகள் கடுமையான அதிருப்தியுடன் இருந்து வந்தனர். அதாவது சம்பந்தன் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கடுமையான விசுவாசியாகவும் அவருக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகராகவும் ஒரு கட்டத்தில் செயற்பட்டு வந்தார். வெளிப்படையாக தமிழ் மக்கள் மீது தான் கரிசனையுடையவர் போன்று சம்பந்தர் காட்டிக்கொண்ட போதிலும் மறைமுகமாக தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் நிகழ்ச்சி நிரலுடனேயே சம்பந்தன் செயற்பட்டு வருவதாக புலிகள் கருதினர். குறிப்பாக அரசியல் தீர்வை இழுத்தடிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனைகளை வழங்கி வந்ததுடன் இந்தியாவுடன் இராஜதந்திர ரீதியிலான உறவினை வைத்திருந்த சம்பந்தன் இலங்கை தொடர்பில் இந்தியா ஆட்சேபனை தெரிவிக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சம்பந்தன் இலங்கை ஜனாதிபதியின் நடவடிக்கைகளை இந்தியாவிடம் நியாயப்படுத்தி வருகிறார் என்ற பார்வை புலிகளிடம் இருந்தது.

ஜனாதிபதி சந்திரிகாவின் விசுவாசியாகவும், தங்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டிலும் செயற்பட்டு வருகிறார் என்று புலிகள் சம்பந்தன் மீது ஆத்திரம் கொண்டிருந்தனர். அவரது நடவடிக்கைகளையும், விசுவாசத்தையும் பாராட்டும் விதத்தில் ஜனாதிபதி சந்திரிகாவினால் சம்பந்தனிற்கு குண்டு துளைக்காத பென்ஸ்கார் ஒன்றும் பரிசளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் விசேட கொமாண்டோப் பாதுகாப்பும் சம்பந்தனிற்கு அந்நாட்களில் வழங்கப்பட்டிருந்தது. இந்த விடயங்கள் புலிகளை கடுமையாக எரிச்சலடைய வைத்திருந்ததுடன் சம்பந்தனை போட்டுத்தள்ளுவதற்கென புலிகளின் புலனாய்வுத் துறை பிரிவொன்றும் களம் இறங்கியிருந்தது.

அந்த புலனாய்வுத் துறை நடவடிக்கைகளை பார்ப்பதற்கு முன்னர், இவ்வாறு சம்பந்தன் தொடர்பில் புலிகள் கடுமையான அதிருப்தியுடன் இருந்த காலப்பகுதியில்தான் சம்பந்தனையும், புலிகளையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டினை ஊடகவியலாளர்களான டி.சிவராம், இரா.துரைரட்ணம், ஜெயானந்த மூர்த்தி போன்றவர்கள் மேற்கொண்டு வந்தனர். இதன் விளைவாக சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக மாறி புலிகளின் அபிமானியாக மாறத் தொடங்கினார். இவ்வாறு மாறி இருந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் லண்டனில் இருந்தவாறு அன்ரன் பாலசிங்கம் நக்கலாக உங்களது பழைய ஆள் என்ன செய்கிறா? என்ற கேள்வியைக் கேட்டு சம்பந்தரை திக்குமுக்காடச் செய்தார்.

புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு, அவர்கள் உருவாக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக ஆனபிறகும் கூட, இவ்வாறு ஒவ்வொரு உரையாடலின் போதும் பாலசிங்கம் தன்னுடன் நக்கலாகவும் கொச்சையாகவும் கதைத்து வந்தது சம்பந்தனிற்கு புண்ணில் புளி விடும் எரிச்சலூட்டுகையாகவே இருந்து வந்தது. ஒரு தடவை கிளிநொச்சியில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை சந்திப்பதற்காக வன்னிக்கு வந்திருந்த கூட்டமைப்பினர் சந்திப்பு முடிந்து வெளியில் சென்ற பின்னர் சம்பந்தர் தமிழ்ச் செல்வனை தனியே சந்திக்க விரும்புவதாக ஒரு கோரிக்கை விடுத்தார். இக் கோரிக்கையை ஏற்று சம்பந்தரும், தமிழ்ச்செல்வனும் தனியே சந்திப்பதற்கு காத்திருந்த பொழுது வெளியில் சென்ற இதர கூட்டமைப்பினர் தங்களைப் பற்றி சம்பந்தர் ஏதோ போட்டுக் கொடுக்கப்போகிறார் என எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டு சென்றனர். ஆனால், தமிழ்ச்செல்வனிடம் சம்பந்தன் முறையிட்டதோ வேறு. அன்ரன் பாலசிங்கம் தன்னுடன் நக்கலாகவும், நையாண்டியாகவும் கடுமையான வார்த்தைகளுடன் கதைப்பதாகவும் தனது அரசியல் வாழ்வில் பெரும் அதிர்ச்சி தரும் வார்த்தைப் பிரயோகங்களை அன்ரன் பாலசிங்கம் பிரயோகிப்பதாகவும், சம்பந்தன் குறைப்பட்டுக் கொண்ட பொழுது தமிழ்ச் செல்வன் தனது வழமையான பாணியில் பாலா அண்ணைக்கு வயது போய்விட்டது. அந்தாள் அறளை பேர்ந்துள்ளதால் அப்படிக் கதைக்கிறார். அவர் கதைக்கின்ற நல்ல விடயங்களை கவனத்தில் எடுங்கள் மற்ற விடயங்களை கேட்காதது போன்று விட்டுவிடுங்கள் என்று சம்பந்தரிற்கு சமாதானம் கூறுகிறார். அப்போதும் சமாதானம் அடையாமல் வாட்டத்துடன் நின்றிருந்த சம்பந்தரை தமிழ்ச்செல்வன் இந்த விடயம் தொடர்பில் நான் தலைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்வேன் என்று பலவாறு தேறுதல்கள் கூறியே படாத பாடுபட்டு அனுப்பி வைக்கிறார்.

இதன் பின்னர் அன்று மாலை அன்ரன் பாலசிங்கம் தமிழ்ச் செல்வனுடன் வழமை போன்று கதைத்தபோது பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவரும் உரையாடியபின் ஒரு கட்டத்தில் சம்பந்தரின் சந்திப்புத் தொடர்பிலும் அவர் வெளியிட்ட ஆதங்கம் தொடர்பிலும், தமிழ்ச்செல்வன் பாலசிங்கத்திடம் தெரியப்படுத்துகிறார். பாலசிங்கம் சிரித்துக் கொண்டே நீங்கள் தடவிக் கொண்டு சிரித்துக்கொண்டு அரசியல் செய்வீர்கள் எனக்கு அது தெரியாதடா தம்பி… நான் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லித்தான் அரசியல் செய்வேன். நான் கதைப்பதை நிறுத்த வேண்டுமென்று பிரபாகரனோ அல்லது நீயோ சொன்னால் நான் நிறுத்தி விடுவேன். அல்லது நீங்கள் தண்டனை தரவேண்டும் என்று எண்ணினாலும் தயாராகவே இருக்கிறேன். ஆனால் நான் கதைக்கின்ற தொனியை சம்பந்தனிற்காக மாற்றமுடியாது என்று தமிழ்ச் செல்வனிடம் கடுமையாக பாலசிங்கம் சொல்லிவிடுகிறார். அதற்கும் தமிழ்ச்செல்வன் சிரித்தவாறு நான் உங்களை கதைக்க வேண்டாமென்று சொல்லவில்லை, தலைவரும் கடைசி வந்தாலும் அப்படிச் சொல்லமாட்டார். இவங்கள் கள்ளன்கள் அண்ணை… சில விடயங்களை நாங்கள் கதைக்கமுடியாமல் இருக்கிறோம். இதைக் கதைப்பதற்கு உங்களால் மட்டுமே முடியும். நீங்கள் வழமைபோன்று கதையுங்கள் எங்களிடம் முறையிட்டால் நாங்கள் பாலா அண்ணை வயது போய் கதைக்கிறார் அதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று சமாளிப்போம் என்று கூறிப் பெரிதாகச் சிரிக்கிறார். நான் இப்பொழுதும் இளமையுடனும், இளைஞன் போன்றே எனது வெள்ளைக்கார மனுசியுடன் இருக்கிறேன்.

நீர் என்னை வயது போன கிழவன் ஆக்கி அடேல் அன்ரியை பிரிக்க நினைக்கிறீரா? என பாலசிங்கம் நக்கலாகக் கேட்க தொடர்பும் துண்டிக்கிறது. பின்னர் என்ன நடந்தது என்பதை தமிழ் ஊடகங்கள் அறிந்து கொண்டனவா? அல்லது அறிந்தும் அறியாமல் மௌனம் காத்தனவா என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்.)

(வே. அர்ச்சுணன்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல